பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

239


வேதாகமங்களிலே மந்திரம் பதம் வன்னம் புவனம் தத்துவம் கலே என்னும் அத்துவாக்கள் ஆறும் இறைவ னுக்கு அவயங்களாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் மந்திரம் இரத்தமாகவும், பதங்கள் முடியாகவும், வன்னம் தோலாகவும், புவனம் உரோமமாகவும், தத் துவங்கள் எழு வகைத் தாதுவாகவும், கலே அவயவமாகவும் கூறப்படும். கழலாவது பூமி, முடியாவது வானகம் என இயைத்துப் பொருள் கொள்க. மாது-கங்கை. அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே’ என்பது திருவாசகம்.

பிண்டலிங்கம்

மக்கள் உடம்பே சிவலிங்கமும் ஆதலேயுணர்த்துவது 159. மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்

inff ğğ}{i -- ராக்கை வடிவு சிதம்பரம் மானுட ராக்கை வடிவு சதாசிவம் மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே. (1726) மக்களுடம்பே சிவலிங்கமும் பிறவுமாதலே அறிவிக்கின்றது.

(இ.ஸ்) மக்கள் யாக்கையின் வடிவ அமைப்பே சிவ லிங்கத் திருமேனி . மக்கள் யாக்கையின் வடிவே சிதாகrய மாகிய சிதம்பரம் . மக்கள் யாக்கையின் வடிவே சதாசிவ மூர்த்தி. மக்கள் யாக்கையின் வடிவே இறைவனது திருக் கூத்தாகும் எ-று.

மக்கள் தலே பாணம், இடைப்பட்ட உடல் சத்திபீடம், கால் முதல் அரைவரை பிரமபீடம் எனக்கொள்ளின் மானுட ராக்கை வடிவு சிவலிங்கமாதல் புலம்ை. சிதம்பரம்சிதா காயம். மக்கள் உடம்பில் நெஞ்சத் தாமரை சிதம்பர மாதல் தெளிவு. சதாசிவம்-சத்தியும் சிவமுமாய் ஒன்றிய மூர்த்தி. மக்கள் யாக்கை ஆணும் பெண்ணுமாய் ஒன்றிய