பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 திருமந்திரம்

நல்கும். ஜம்முகன்-ஐந்து திருமுகங்களையுடைய சதாசிவ மூர்த்தி. பர விந்து-மேலான விந்து . இங்கு ஏககிைய இறைவனுக்குச் சொல்லப்பட்ட ஒன்பது வடிவங்களேயும்

'சிவஞ் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்

உவந்தருள் உருத்திரன்தான் மால் அயன்

ஒன்றிளுென்ருய்ப் பவந்தரும் அருவம்தால் இங்குருவம் நால் உபயம் ஒன்ரும் நவந்தரு பேதம் ஏகநாதனே நடிப்பன் என்பர்’

(சித்தியார்-சுபக்-164)

என விளக்குவர் அருணந்தி சிவாசாரியார்.

1. சிவம்-புறப்பொருளே நோக்காது அறிவு மாத்திரை யாய் நிற்கும் நிலே,

2. சத்தி-உயிர்களே நோக்கி நிற்கும் அருள் நிலே .

3. நாதம்.சிவ சத்தி உயிர்களின் பொருட்டு வியா பரிக்குங்கால் ஞான சத்தி வடிவாய் நிற்கும் நிலை . பர நாதம் எனப்படுவதும் இதுவே.

4. விந்து-மேற்குறித்த ஞானசத்தியால் தோற்று விக்கப்பெறும் கிரியாசத்தி. இது பரவிந்து எனவும்படும். (இக்கிரியா சத்தி சுத்தமாயையைக் கூடிய விடத்து நாதம் தோன்றும், நாதத்தினின்று விந்து தோன்றும் . இவை முறையே அபரநாதம், அபரவிந்து எனப்படும்)

அறிவுநிலை, அருள் நிலே, ஞானசத்தி, கிரியாசத்தி இவை நான்கும் இறைவனுக்கு அருவத் திருமேனிகள்.

5. சதாசிவன் - துலலய நிலையில் நின்று பொது வகையாற் சங்கற்பித்த இறைவன் போக நிலையில் நின்று தனது ஞான சத்தியாற் சிறப்புவகையால் நோக்கிக்