பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

289


சத்திதிபாதம்: மலத்திற்கு அநுகூலமாய் நின்று நடாத் திய திரோதான சத்தி மலம் பரிபாக மெய்தியவழி அக் கருணே மறமாகிய செய்கை மாறிக் கருணையெனப்படும் முன்னே ப் பராசத்தி ரூபமாய் ஆன்மாக்கள் மாட்டுப் பதிதல்.

சத்தி நிபாதம்-சத்தியினது வீழ்ச்சி நி என்பது ஏற்றமாக என்னும் பொருள் குறித்து நின்றதோர் இடைச் சொல் ,

194. மாயைகைத் தாயாக மாமாயை யீன்றிட

ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயுமுயிர் கேவல சகல த் தெய்தி ஆய்தரு சுத்தமுந் தான்வந்

தடையுமே. (2268)

ஆன்மா இறைவனருளால் கேவல சகலத் தெய்திச் சுத்த நிலையை அடையுமாறு கூறுகின்றது.

(இ-ள்) எவ்விடத்துமாய்க் கலந்துள்ள பரம்பொரு ளாகிய சிவபெருமான், அப்பகை நின்று அருள்புரியப் பொருந்திய ஆன்மா சுத்தமாயை (தன்னை ப் பிள்ளையாய்ப்) பெற, அசுத்தமாயை செவிவித்தாயாய் நின்று வளர்க்க, கேவல நிலையி னிங்கிச் சகலநிலையை யடைந்து (சிவ ஞானத்தால்) ஆய்ந்து தெளியப் பெறும் சுத்த நிலையை யும் வந்தடையும். எ-று.

இறைவன், கேவல நிலையிற் கிடந்த ஆன்மாவைச்சுத்த மாயையின் இடமாகத் தோன்றச் செய்து , அசுத்தமாயை யைக் கொண்டு வளரச்செய்து, தூய்மைப்படுத்தித் தன்ன டிக் கீழ் ச் சேர்த்தருள் வன் என்பது கருத்து.