பக்கம்:திருமாவளவன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் பண்புடைமை 111

கொண்டு இருந்தாலும், அப்பகை உணர்ச்சியை இறுதி வரை கொண்டு நிற்பாால்லர் , அறங்கூர் அவையுள், தம் வழக்கை உரைக்கப் புகுவதற்குமுன்னரே, தம் பகைவிட்டு ஒன்றுபடுவர்; எனவே, அங்காட்டு மக்கள், இளையராயி லும், முதியாயினும் தம்முள் மாறுபட்டு வாழாமல் ஒன்றுகலந்தே வாழ்கின்றனர் என, அங்காட்டுப் பண்பைக் குறிப்பதாகத் தோன்றுகின்றதே ஒழிய, கரிகாலன் முறை செய்யும் முறையை விளக்கவந்ததாகத் தெரியவில்லை. பாட்டைத் தமக்கு வேண்டியவாறு பிரித்தும், கொண்டு கூட்டியும், தம் மனதில் நிறைந்துள்ள கருத்துக்களையும், கதைகளையும் ஏற்றிப் பொருள்செய்ய முயற்சிப்பது நச்சி ஞர்க்கினியர் மேற்கொள்ளும் முறையாகும் என்பதற்கு இதையும் ஒரு சான்ருகக் கொள்வதல்லது, அவர் பொருளை உண்மைப்பொருள் எனக் கொள்வதற்கில்லை.

நிற்க, மணிமேகலை, பழமொழிச் சான்றுகளைக் கொண்டு இவ் வரலாற்றை உண்மையென ஒப்புக்கொள்வ தாயின், அக்காட்டு மக்கள், தன் அரசன் யார் என்பதை யும் உணராதவர் என்ற பழியையும், அறியாமையையும் அவர்களுக்குச் சூட்டுவதோடு, கரிகாலன் காட்சிக்கு அரி யன் என்ற பழியைக் கரிகாலனுக்கும் அளித்தவராவோம். கரிகாலன் பிறப்பதற்கு முன்னரே, அவன் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி இறந்துவிட்ட்ான் என்பதும், அவன் தாயத்தார், அவன் இளமைக்காலத்தே அவனைக் கைப்பற்றிச் சிறைசெய்தனர் என்பதும், அவன், தன் வாள் துணை கொண்டு சிறையினின்றும் மீண்டு தன் அரச உரிமை யைப்பெற்ருன் என்பதும், அந்நாட்டு மக்கள் அனைவரானும் அறியப்பட்ட நிகழ்ச்சிகளாதல்வேண்டும். அவ்வாருகவும், அந்நாட்டு மக்களுள் சிலர், அதிலும் முதியோர், தங்கள் அரசன் பார், அவன் ஆண்டில் இளையோன, முதியோன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/123&oldid=578897" இலிருந்து மீள்விக்கப்பட்டது