பக்கம்:திருமாவளவன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 திருமாவளவன்

கொண்டு வந்து அரியணை மீது அமர்ந்தானுக, வழக்குரைக்க

வந்த முதியோர், இவன்போலும் அரசன் என எண்ணி, தம் வழக்கை அவன்பால் உரைக்க, அதுகேட்டு, அதற்கு அம் முதியோர் வியக்குமாறு முறையளித்ததோடு, அவர் காணத் தம் முதுமை உருவைக் களைந்து, தன் முன்னே இளமை உருவுகாட்டி அவர்கள் வியப்பையும் நாட்டுமக்கள் பாராட்டுதலையும் பெற்ருன் என்ற ஒரு வரலாறு நிலவி வருகிறது.

இக் கொள்தையை அரண் செய்வன, இளமை காணி, முதுமை எய்தி, உரைமுடிவு காட்டிய உாவோன்.” என்ற மணிமேகலைத் தொடரும்,

உரை முடிவு கானன் இளமையோன் என்ற ஈரைமுது மக்கள் உவப்ப-நரைமுடித்துச் சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமற். பாகம் படும்.”

என்ற பழமொழி வெண்பாவும், அதன் உரையுமே ஆகும்,

இனி, "முதியோர் அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும்.’’ என்ற பொருநராற்றுப்படைத் தொடர் கரிகாலன் நரைமுடித்து முறைசெய்த வரலாற் றைக் குறிப்பதாகப் பொருள் கூறுவர் நச்சினர்க்கினியர், இத்தொடர், சோழநாட்டு வளங்களை விரித்துரைக்கும் பகுதியில், “இளையோர் வண்டலயாவும்,” என அந்நாட்டுச் சிறுவர் தொழிலாகிய ஆடலைக் குறித்துப் பின்னர் முதி யோர் செயலைக்குறிக்கக் கூறப்பட்டுள்ளது. இளையோர் தம்முள் பகையின்றிக் கலந்து வண்டலாடி விளையாடுகின் றனர்; அங்காட்டு முதியவர்களும், முன்னே பகைமை

1. மணிமேகலை, 4 : 1.07-108. .

2. பொருநராற்றுப்படை : 187-188.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/122&oldid=578896" இலிருந்து மீள்விக்கப்பட்டது