பக்கம்:திருமாவளவன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் பண்புடைமை 109.

பேர் அரசர்களும், குறுநிலமன்னர்களுமாகப் பலர் எனி னும், அவர் பன்மையும், ஆண்டின் முதுமையும், தன் தனிமையும், இளமையும் கண்டு அஞ்சாது எதிர்த்து வெற்றிபெற்ருன் எனின், அவன் வீரத்தைப்பற்றி மேலும் விளக்குவது வேண்டுவதின் று. வடகாடு செல்ல விரும்பிய அவன், அதற்கு முன்னர்த் தன் காட்டில், தன் பகைவர், தன்னினும் ஆற்றல் வாய்ந்தவர் என ஒருவரையும் விடாமல் அனைவரையும் வெற்றிகொண்டது, பெரும்படைத் தலைவர் கள் பால் இருக்கவேண்டிய போர்துனுக்கங்கள் பலவும் அவன்பால் பொருந்தியிருந்தன என்பதை உறுதி செய்வ தாகும். பெரும் வீரனே எனினும் அவன்மாட்டும், ஏனைப் பெருவீரர்கள் பால் இருந்த, தம்மோடு போரிட்டுத் தோற்ற பகைவர் நாட்டைப் பாழ்செய்து மகிழ்தலாகிய பெருங்குற்றம் நீங்கிற்றில்லை.

கரிகாலன் ஆட்சி, அறைெடு புணர்ந்த ஆட்சி; கொலைகடிந்து களவுநீக்கி ஆண்டான் அவன்; அவன்காட்டு மக்களும், வடுவஞ்சி வாய்மொழிந்து, நடுவுகின்ற நெஞ்சின ராய் வாழ்ந்தனர் என்றல், அவன் ஆட்சியின் சிறப்பை வேறு எடுத்து ஒதவேண்டியதின்று. இவன் நீதியின் நேர்மையை விளக்க, தம்முள் மாறுபட்டுப் பகைகொண்டு கரிகாலன்பால் தம் வழக்கை உரைத்து முறைவேண்டி வந்த முதியோர் இருவர், அறங்கூர் அவையில் அமர்ர் திருந்த கரிகாலன், கனி இளையணுய் இருப்பதுகண்டு, இத் துணை இளம்பருவம் உடையான், நம் வழக்கின் நன்மை தீமைகளை நாடி முடிவுகூறும் மூதறிவுடையணுயிரான் என்று எண்ணியவாய்த் தம் வழக்கை அவன் முன் உரைக்கத் தயங்கினராக, அவர்கள் தளர்ச்சியைக் குறிப் பான் அறிந்துகொண்ட கரிகாலன், அவையின் நீங்கி உள்ளே சென்று, கரைதிரை பெற்ற முதியோன் உருவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/121&oldid=578895" இலிருந்து மீள்விக்கப்பட்டது