பக்கம்:திருமாவளவன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 திருமாவளவன்

வெண்ணத்தைக் குறைவற நிறைவேற்றிக் கொள்ளத் தக்க வழிவகைகளே எண்ணித் துணியும் அறிவு, துணிந்த வகையானே செயலாற்றக் கூடிய ஊக்கம் முதலியன இல் லாது போயின், அவ்வெண்ணத்தால் பயனில்லை. " வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு,” என்பர் வள்ளுவர். கரிகாலன், ஒருகுடையான் ஒன்று கூறப் பெரி தாளவேண்டும் என்ற பேராசை கொண்டவனுய் இருப்ப தோடு, அவ்வாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அறி வும், சூழ்ச்சியும், ஆண்மையும், திறனும் ஒருங்கே உடையன் ஆவன். பகைவர் சிறையகத்திருந்த அவன், அதனினின்றும் மீண்ட வழிமுறைகளானே அது தெளியப்படும். அவன் சின்னுள் சிறையகத்தே வாழ்ந்ததை, எதிர்த்தன எவ்வளவு பெரியன ஆயினும் கப்பாது தாக்குவதும், தான் எதிர்த்த களிறு பிழைத்துவிட்டதாயின், அதற்காக, எலியைக் கொல்லும் இயல்பை என்றும் மேற்கொள்ளாப் பண்பு வாய்ந்ததும் ஆகிய ஊக்கமும், உறுதியும், பெருந்தன்மை யும் பொருந்திய சிங்கக்குருளே கூட்டில் வளர்வதைேடும், தான் இளையன்; பகை பெரிது; அவர் தன்னை அடைத்து வைத்துள்ள சிறை செறிவுடைத் திண்காப்புடைத்து என்று கருதி வாளா இராது, அச்சிறையினின்றும் மீளும் வழிவகைகளை நுண்ணிகின் உணாநாடி, பகைவர் காவலைத் தன் வாள் துணையால் கழித்து வெளியேறிய அவன் வீரச் செயலேத் தன்னக் கைப்பற்றுவோர் அகழ்ந்த குழியில் அகப்பட்டுக்கொண்ட மதம்மிக்க யானே, இனி மீளவழி யில்லை என்று செயலற்றுப் போகாமல், தன் கோட்டால் குழியின் கரைகளைக்குத்தி, அதைத் துர்த்து வெளியேறிய செயலோடும் ஒப்புமை தோன்றக் கூறிய முறையானே, அவன் அறிவு, ஊக்கம், ஆராய்ந்த செயல்வகை முதலா யின தோன்றும். மேலும், தன்னை எதிர்த்த பகைவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/120&oldid=578894" இலிருந்து மீள்விக்கப்பட்டது