பக்கம்:திருமாவளவன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கரிகாலன் பண்புடைமை

" தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி, வெண் குடை கிழற்றிய ஒருமையோன்,' என்ற பாராட்டுரை யைப் பண்டைய அரசர் பெரிதும் விரும்பினர். " கின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் சின், வெண்டலப் புணரிக் குடகடல் குளிக்கும்” என்ற புகழ்உரையே விழு மியஉரையாகக் கொண்டனர் அந்நாள் வேந்தர். விழுப் புண்படாத நாளெல்லாம் வழுக்கினுள், வைக்கும்தன் நாளே எடுத்து, என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப, விழுப்புண் படலை விரும்பி மேற்கொண்டனர் அக்காலை வீரர்கள். போர் என்ற உடனே, காலில் கழல் புனேந்து புறப்பட்டு விடுவர். இந்தப் பண்பு கரிகாலனிடத்தும் இருந்தது என்று கூற வேண்டுவதின்று. பெற்றதே பெரிது’ என்று அமைதி கொள்ளும் சுருங்கிய உள்ளமுடையவனல்லன் கரிகாலன். “பெற்றவை மகிழ்தல் செய்யான்” என்பர் கடியலூர் உருத்திரங்கண்ணனர். செருவெம் காதலின் திருமா வளவன்' என்று இவன் போர்வேட்கை மிக்குடையோன் • என்பர் இளங்கோவடிகள். தமிழகம் முற்றும் தன் ஆணை யின்கீழ் வந்துவிட்டது என்று அமைதிகொண்டானல்லன். அத்துடன் அவன் போர்வேட்கை தணிந்திலது. தமிழ் நாட்டில் தன்ளுேடு எதிர்கின்று போர்புரியும் பெருவீரன் ஒருவனும் இல்ன் என்பது உணர்ந்து போரை விரும்பி வடநாடு நோக்கிச் சென்ருன், இருகில மருங்கில் பொரு நாைப்பெரு, செருவெங் காதலின் திருமாவளவன், புண் ணியத் திசைமுகம் போயினன்.’ (புண்ணியத் திசைமுகம் வடநாடு) x - .

பேர்அாசைப் பெறவேண்டும்; பெரிய நாட்டை ஆளவேண்டும் என்ற எண்ணம்மட்டும் இருந்து, அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/119&oldid=578893" இலிருந்து மீள்விக்கப்பட்டது