பக்கம்:திருமாவளவன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருமாவளவன்

சிறப்பின் பட்டினமே பெறுவதாயினும் வாரிருங்கூந்தல் வயங்கிழை ஒழிய வாாேன்” எனக்கூறித் தலைமகன் செல. வழுங்குவதாகப் பாடப்பெற்றதாகும். இதைப்பாடும் வாயி லாகச் சோழநாட்டு வளத்தையும், செல்வச் சிறப்பையும், தலைநகர்ப் பெருமையையும், நகர மக்களின் இன்பவாழ்க்கை யையும், சோழநாட்டு வாணிப வளத்தையும், விளங்க உரைத்ததோடு, சோழர்க்குப் பகையாயினர் தம் காட்டின் அழிவும், கரிகாலன், தாயத்தாரால் சிறை வைக்கப்பட்ட தும், அவன், அதினின்றும் வெளிப்போந்து அவரை வென்று உருகெழுதாயம் ஊழின் எய்தியதும், பல் ஒளியர் பணிபொடுங்க, தொல் அருவாளர் தொழில்கேட்ப, வட வர் வாடக், குடவர் கூம்ப, தென்னவன் கிறல்கெட, புன் பொதுவர் வழியொன்ற, இருங்கோவேள் மருங்குசாய வெற்றிபல் பெற்ருன் என்பதும், காடுகொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம்பெருக்கி, வளவன் என்ற பெரும் பெயர் பெற்ருன் என்பதும், உறந்தையைப் புதுக்கி, அரண் நிறைந்த நகராக்கினுன் என்பதும் ஆகிய கரிகாலன் வரலாற்றையும் அறிவிப்பாாாயினர்.

பெரும்பாற்ைறப்படையில், ஐந்தினைவளத்தை விளக்கு முகத்தான் தொண்டைநாட்டு வளத்தையும், அதன் தலைநகர் கச்சியின் சிறப்பையும் விளக்கிய புலவர், திரையன்பெருமையைக் கூறும்போது அவன், முரசு முழங்குதானே மூவருள்ளும் சிறப்புடையோன் எனவும், அவன் நாடு, அத்தம் செல்வோர் அலறத்தாக்கிக் கைப் பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக் கொடியோர் இன்று; கடியுடை வியன் புலம், உருமும் உாரு து; அாவுக் தப்பா, காட்டுமாவும் உறுகண் செய்யா' எனவும் புகழ்ந்து கூறுவர். -

_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/118&oldid=578892" இலிருந்து மீள்விக்கப்பட்டது