பக்கம்:திருமாவளவன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் வரலாறு 105

கொள்ளைகொண்டும் போகும் எண்ணமுடையாய், வேலேந்தி வந்தாரையும், மனமாற்றி அருள் நிரம்பிய உள் ளத்தவராக்கும் உருக்கம் நிறைந்தது பாலைப்பண்-'ஆறலை கள்வர் படைவிட அருளின், மாறுதலே பெயர்க்கும் மருவின் பாலை” எனப் பாலைப்பண் இயல்பு கூறியது பாராட்டத் தக்கதேயாம். இவையே அன்றி, முடத்தாமக்கண்ணி யாரைப்பற்றி வேறு ஒன்றினையும் அறியமாட்டாத் தாழ் நிலையில்தான் தமிழகம் தமிழை வளர்த்து வந்துளது. -

6. கடியலூர் உருத்திரங்கண்ணனுர்

பட்டினப்பாலையால் கரிகாற் பெருவளத்தானையும், பெரும்பாணுற்றுப்படையால் தொண்டைமான் இளங் கிரையனையும் பாராட்டிய இவர் பிறந்த கடியலூர் எந் நாட் டது என்று அறிய முடியவில்லை. ஊரும், பெயரும் ”* என்ற தொல்காப்பியம் மரபியற் சூத்திரத்திற்கு உரை வகுத்த பேராசிரியர், இவரை அந்தணர் என்பர். கரிகாற் பெருவளத்தான்மீது பட்டினப்பாலை பாடியதற்குப் பரி சாகப் பதினறு நூருயிரம் பொன் பெற்ருர் என்பது " தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன், பத்தொடாறு நூருயிரம்பெறப் பண்டு பட்டினப் பாலைகொண்டதும் ” என வரும் கலிங்கத்துப் பாணிப் பாடலால் அறியப்படும்.

பட்டினப்பாலே, பொருள்வயிற் பிரியக் கருதிய நெஞ்சை நோக்கிப் பிரிந்து செல்லும் வழியில் இடைப் படும் கானம், கரிகாற்பெருவளத்தான் வேலினும்கொடிது; தலைவியின் கோளோ எனின் கரிகாலன் செங்கோலினும் தண்ணிது (இனிது); ஆகவே, இத்தன்மையாளைப் பிரிந்து வருவதால், கரிகாலனுடைய செல்வ மலிந்த முட்டாச்

1. தொல். பொருள்: 629.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/117&oldid=578891" இலிருந்து மீள்விக்கப்பட்டது