பக்கம்:திருமாவளவன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 திருமாவளவன்

சிறப்பு, சோணுட்டு வளம் ஆகியவற்றை மிக அழகாகத் தாம் இயற்றிய பொருநராற்றுப்படையில் அமைத்துப்பாடி யவர் இவர். இப்பாட்டினல் கரிகாற்பெருவளத்தான், உருவப்பஃறேர் இளையோன் சிறுவன் என்பதும், காய் வயிற்றிருந்து தாயம் எய்தியவன் என்பதும், பிறந்து தவழ் கற்ற நாள்தொடங்கியே போர்த்தொழில் மேற்கொண் டான் என்பதும், இருபெரு வேந்தரும் ஒருகளத்தவிய வெண்ணியில் தாக்கி வெற்றிபெற்ருன் என்பதும், தன் அவை புக்க முதியோர் பகைமுரனைப் போக்கினுன் என்ப தும் ஆகிய இவையெல்லாம் அறியவைத்துள்ளார். மேலும், கரிகாலன் தன் பால் பரிசில்பெறத் தன்னை அடைந்த இா ദുരിത ു அண்மையில்இருத்தி, அன்புடன் நோக்கி அவர்க்கு அவுரி யன்ன அறுவை கல்கி, தன்மாடத்திருத்தி, அவர்க்கு ஊனும், சோறும் ஒன்று குறைவில்லாமல் அவர் இருக்கும் காலும் அளித்து, அவர் ‘எம்தொல்பதி சேறும்” என்று கூறியகால, பிரிய மனம் பொருதே அவர்க்கு வேண்டுவன நல்கி அளிக்கும் கொடைத்திறன் மிகவும் அழகாக விளக்கப்பட்டுளது. - -

தமிழ்வேந்தர் மூவரும் தம்முள் ஒற்றுமை இலாய், ஒருவரோடு ஒருவர் பகைகொண்டு போரிட்டு வாழும் வாழ்க்கை ஒழிந்து, நட்புப் பூண்டு ஒற்றுமையாக வாழ்க் தால் உலகிற்கு உண்டாகும் பெருகலனைக் காணவேண்டும் என்ற தன் பெருவேட்கையைத், தன் இன்மை தீர்ந்த கிலைக்குப் பீடுகெழுதிருவின் பெரும்பெயர் நோன்தாள் முரசு முழங்குதானே மூவரும்கூடி அரசவை இருந்த தோற் றத்தை உவமையாக எடுத்துக்கூறிய அதனுன் வெளியிட்ட பண்பு, பலராலும் விரும்பிப் பாராட்டற்குரியதாகும். வழி யில் வருவோரை அலைத்து அவர்தம் பொருளைக் கொள்ளை கொண்டும் பொருள் இலாயின் அவர்தம் தலையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/116&oldid=578890" இலிருந்து மீள்விக்கப்பட்டது