பக்கம்:திருமாவளவன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் வரலாறு 103

குத்திரத்திற்கு ஈச்சிர்ைக்கினியர் செய்த உரையான் விளங் கும். திருமூலம் பாடிய மாமூலர் வேறு ; இவர் வேறு. புறத்துறை தழுவிய பாடல் ஒன்றும் பாடாமையாலோ அல்லது, வரலாற்று நிகழ்ச்சிகளில் தமக்குள்ள ஆர்வ மிகுதியாலோ, தாம் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றினும் ஒரு வரலாற்றுக் குறிப்பை, அது இறந்தகால சிகழ்ச்சி யாயினும், நிகழ்கால நிகழ்ச்சியாயினும் குறியாது இரார். இவர் தமிழ்நாட்டு அரசியல் சிகழ்ச்சிகளையே அன்றித் தமிழகம் கடந்த பிறநாட்டு வரலாறுகளேயும் அறிந்து குறிப்பிடுவர். அவற்றுள், பாடலிபுரத்தில் நந்தர் பெரும் பொருள் சேர்த்து வைத்ததும், மோரிய மன்னர் தென் ட்ைடுப் படையெடுப்பும் சிறப்புடையன. இவற்றுள் மோரியர் படையெடுப்புக் குறிப்பு தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்களுக்கு அருந்துணை புரிவதாகும். கரிகாலன் நாட்டில் வெண்னெல் மிகுதியாக விளைவதையும், அவன் வெண்ணிப் போரையும், அதில் அவளுேடு போரிட்டுப் புறப்புண் பெற்றுத் தோற்ற சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்ததையும், அதைக்கேட்ட சான்ருேர் பலரும் அவனுடன் உயிர்நீத்தவரலாற்றையும் குறிப்பிட்டுள்ளார்."

5. முடித்தாமக்கண்ணியார்

கரிகாற்பெருவளத்தானைக் கண்டு அவனுல் நன்கு உபசரிக்கப்பெற்று மீண்டுவரும் பொருகன் ஒருவன், தன் வழியில் எதிர்ப்படும் வேறு பொருநன் ஒருவனே நோக்கிக் கரிகாலன்பாற் செல்லின், கின் வறுமை தீர வழங்குவன் என ஆற்றுப்படை செய்யும் முகத்தான், கரி காலன் வரலாறு, அவன் வெற்றித்திறம், கொடைச்

1, φίσιο : 251, 265. 2. o. 251,281. 3. அகம்: 201. 4. அகம்: 55.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/115&oldid=578889" இலிருந்து மீள்விக்கப்பட்டது