பக்கம்:திருமாவளவன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 - திருமாவளவன்

லாதனுர்’ என்பதல்லது, இவருடைய பிற வரலாறுகள் ஒன்றும் அறிய இயலவில்லை. 3. வெண்ணிக்குயத்தியார்

பழந்தமிழ்நாடு பெற்றிருந்த பெருமைக்குரிய கார ணங்களுள், அந்நாடு கல்லிசைப்புலமை மெல்லியலார் பல ரைப் பெற்றிருந்ததும் ஒன்று ஆகும். பதினறுவருக்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் பண்டைத் தமிழகத்தை அணி செய்து விளங்கினர். அத்தகைய பெண்பாற் புல வருள் ஒருவராய இவர், நீடாமங்கலத்திற்கு அண்மையில் இக்காலை கோயில்வெண்ணி என அழைக்கப்பெறும் வெண்ணி என்ற ஊரில் வாழ்ந்த குயவர் குடியில் பிறந்த வர். இவர், கரிகாலன் காலத்தே வாழ்ந்ததோடு அல்லா மல் தன் ஊருக்கு அண்மையில் நிகழ்ந்த வெண்ணிவாயில் போரில், கரிகாலன் ஆற்றிய போர்த்திறத்தையும், முறை யையும், அதன் கிகழ்ச்சிகளேயும் நன்கு உணர்ந்தவராவர். அப்போரில் சோமான் நெடுஞ்சேரலாதன், கரிகாலளுேடு போரிட்டுப் பின்னடைந்து புறப்புண் கொண்டானுக அது கண்டு காணி, தன் உயிரைவிடத் துணிந்து வடக் கிருந்த வரலாற்றை இவர் மிகவும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். மேலும் கரிகாலன் முன்னேர், கட லிடையே கலம் பல செலுத்திப் போரிட்டுப் பெற்ற பெரும் வெற்றிச் சிறப்புக்களையும், கரிகாலன் போர்த்திறனையும்

பாராட்டிக் கூறியுள்ளார்."

4. மாமூலனுர்

மாமூலனர் அந்தணர் மரபினர். இது, ! அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்ற தொல்காப்பியச்

1. புறம்: 224. 2. புறம்: 66, 3. தொல். பொருள்: 75, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/114&oldid=578888" இலிருந்து மீள்விக்கப்பட்டது