பக்கம்:திருமாவளவன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் வரலாறு 101

விழாக் கொண்டாடப் பெற்றவரலாறும், வாகைப் பறக் தலையில், மன்னர் ஒன்பதின்மரோடு பொருது, அவர் புறங்கண்டு, அவர்கள் விட்டுச்சென்ற குடைகளைக் கைப் பற்றிய வரலாறும்,' காவிரியாற்றில், கழார்ப் பெருங் துறையில், விழாக்காணச் சென்ற கரிகாலன், அத்தி என்ப வன் அவ்வியாற்றில் புனலாடுதலைப்பார்த்து மகிழ்ந்திருக் குங்கால், அவனைப் புனல் ஈர்த்துக்கொண்டு போன வா லாறும் பரணர் பாக்களால், கரிகாலன் வாலாருகக் கூறப் பட்டுள்ளன.

பாணர், கரிகாலனுக்கு இரண்டு தலைமுறைக் காலத் திற்குப் பிற்பட்டோனுகிய செங்குட்டுவனையும் பாடிய வராகக் காணப்படுதலால், கரிகாலன் வரலாற்றை நேரில் கண்டே கூறினர் என்று கொள்வதினும், அறிந்தார்வாய்க் கேட்டே கூறினர் என்றுகூறுவர் சிலர். பரணர் கரிகாலன் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியை நேர் முகப் படுத்தியே பாடியுள்ளமையான் இவர், அவன்மகன். காலத்தில் வாழ்ந்தவர் என்பது உறுதி.

2. கருங்குழலாதனுர்

கரிகாலன் உயிரோடு வாழ்ந்த கால அவன் பகைவர் நாட்டை அழித்துப்பெற்ற வெற்றிச்சிறப்பைப் பாராட் டிய இவர், அவன் இறந்தாகை மனத்துயர் உற்று, அவன் வெற்றிச் சிறப்பையும், இரவலரைப் புரந்த அவன் வள்ளன்மையையும், வேத வேள்விச் செயல்முடித்த அவன் அறச்செயலையும், எண்ணி எண்ணி இரங்கி, பின்னர் அவன் உரிமை மகளிர், இழைகளைத்து துயர் உற்ற கண் கலங்கும் காட்சியையும் கண்ணுற்றுப் பாடினர் கருங்குழ

1. அகம்: 246. 2. , 125.

3. , , 376, 4. புறம்: 7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/113&oldid=578887" இலிருந்து மீள்விக்கப்பட்டது