பக்கம்:திருமாவளவன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் பண்புடைமை 113

வளத்தைப் பெருக்கிச், சோழவளநாடு சோறுடைத்து,” என்ற சிறப்பிற்குப் பெரிதும் காரணமாய் விளங்கினன்.

நாட்டை வளமாக்கி உணவுப்பொருள் உயரவழி செய்ததோடு அமையாது, செல்வத்தாலும், சிறந்ததாக ஆக்க வேண்டுமென்று விரும்பினன். விரும்பிய அவன், அதற்குத் தலைநகர் உறையூர்போன்ற உள்நாட்டு ஊர் இருத்தல்கூடாது என்று உணர்ந்து, காவிரி கடலோடு கலக்குமிடத்திற்கு அண்மையில், காவிரிப்பூம்பட்டினம் என்ற அழகிய நகர் ஒன்றை அமைத்தான். இதல்ை, கடல்வாணிபம் வளர்ந்து நாட்டுச்செல்வம் பெருகிற்று. வாணிபப் பொருள்களை வகைப்படுத்தி, அவற்றிற்கான சுங்கத்தை முறையாகப்பெற்று அரசசெல்வத்தையும் பெருக்கினன்.

புதிய தலைநகரைப் பிறநாட்டு மக்களும் கண்டு வியக் கும்வண்ணம் அமைத்த அவன், பழைய தலைநகரின் இன்றி யமையாமையை மறந்தவனல்லன். காவிரிப்பூம்பட்டினம், கடல்வாணிபத்திற்கு ஏற்றது என்பதும், உறையூர், உள். நாட்டுப் பாதுகாப்பிற்கு ஏற்றது என்பதும் உணர்ந்து, உறையூரின் கண் உள்ள, அரசன் கோயில் முதலாய பல் வேறு மாளிகைகளையும் புதியமுறையில் மாற்றி அமைத்த தோடு, அந்நகரைச் சூழப் பெருமதில் எடுத்து, அம்மதில் முற்றும் பகைவரும் கண்டு அஞ்சத்தக்க படைக்கலம் பல அமைத்துத் தலைநகரை அணுகுகற்கரிய அரண் அமைந்த ஒன்முக ஆக்கினன். - -

பிறந்துதவழ் தொடங்கிய நாள்தொட்டு, எல்லையும், இரவும், நாடு, நாடாட்சி என்ற எண்ணமே கொண்டு. வாழ்ந்த கரிகாலன், மனைவி, மக்களோடு மகிழ்ந்து வாழ். வதிலும் தவறினுன் அல்லன். வாய்ப்புக் கிடைக்குக்

தி.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/125&oldid=578899" இலிருந்து மீள்விக்கப்பட்டது