பக்கம்:திருமாவளவன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திருமாவளவன்

தோறும், சுற்றம் சூழச்சென்று காவிரியில், கழார்ப் பெருந்துறைக்கண் நடைபெறும் புதுப்புனலாட்டு விழா வில் கலந்துகொண்டு மகிழ்வதும் உண்டு.

கரிகாலன், புலவரைப் பேணிப் புகழ் பெருக்குவதில் பெரும் விருப்புடையன். அவன் வாயில், 'கசையுநர்க்கு அடையா நன்பெருவாயில்’ எனப் புலவர் புகழ்வர். அவன் புலவர்களைக் கேளிர்போல நோக்கி, வேட்பக்கூறி அழைத்து, கண்ணிற்கான, கண்ணுவழியிருத்தி, அவர்க்கு வேண்டும் உணவும், உடையும் பலப்பல வகையாய்த்தந்து, அவர் இருக்கும் வரைஇருத்தி, அவர்கள், விரும்பியபோது அவர் வேண்டும்பொருள் அளித்து அனுப்புவன். தன் னைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணணுருக் குப் பரிசாகப் பதினறு துருயிரம்பொன் அளித்தான் எனக் கலிங்கத்துப் பாணி கூறுகிறது.

காஞ்சியில் கோயில் கொண்டிருக்கும் ஏகம்பவாணன் திருக்கோயிலைப் புதுப்பித்து, தன் ஆண்டவன்.அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்தியதோடு, அந்தணர் கூறிய ஆகம விதிப்படி வேள்விசெய்து வேறுலகப் பயன் பெற வும் அவன் தவறினனல்லன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/126&oldid=578900" இலிருந்து மீள்விக்கப்பட்டது