பக்கம்:திருமாவளவன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 காலம்

பல்லவராட்சிக்குப் பலநூறு ஆண்டுகட்கு முன்னரே, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ்நாட்டை ஆண்டு வந்தனர். எனினும், தமிழ் நாடாண்ட அரச இனம் பலவற் றுள், நாடாண்ட காலம் கன்கு அறிய அரசோச்சிய முதல் அரச இனம் பல்லவனே. பழந்தமிழ் வேந்தர் வாலாற்றினைக் காலத்தோடு தொடர்புபடுத்திக் காண இயலாத கிலேயில் அவர்கள் வரலாற்றினை அறிவிக்கும் சான்றுகள் அமைக் துள்ளன. பிற்கால அரச இனத்தின் வரலாற்றை அறிதற்கு, அவ்வரசர்கள் காலத்தே எழுந்த கோயில்கள், அக்கோயில் களிலும், பிற பாறைகளிலும் அக்காலத்தே எழுதப்பெற்ற கல்வெட்டுக்கள், செப்பேடுகள், அவ்வாசர்கள் வழங்கிய நாணயங்கள், அக்காலத்தே, உலகின் இயற்கை அமைப் பைக் காணல், உலகச்சமயங்களின் நிலை அறிதல், வாணி பம் ஆக இவைகாரணமாகக் கடல் வழியாகவும், நில வழி யாகவும் இங்கு வந்துசென்ற பிறகாட்டு அறிஞர்கள் எழுதி வைத்த குறிப்புக்கள், இந்நாட்டோடு, தாம் கொண்டிருந்த உறவு முறைகளை விளக்கி, வட இந்திய அரசர்களும், ! இலங்கை அரசர்களும் எழுதிவைத்த வரலாற்றுக்குறிப்புக் கள் போன்றனவும், பிறவும், சான்றுகளாக அமைந்துள். ளன போன்று, சங்க காலக்கே வாழ்ந்த அரசர்தம் வர லாற்றினை அறிதற்குச் சான்முக ஒன்றும் கிடைத்தில.

அவர்கள் வரலாற்றை அறிதற்கு, சமக்குத் துணையாக இருப்பன: அவர்கள் காலத்தும், அவர்க்குப் பின்னரும் - வாழ்ந்த புலவர்கள் பாடிய பாக்களேயாம், அவைதாமும் அக்கால அரசர்வாழ்வை, அவர் வழிமுறைப்படி கிரல் படுத்தி அறிவிக்கும் கிபதிஇன்றி, அவர்தம் வாழ்வில்கண்ட சிலபல விகழ்ச்சிகளை ஒன்றிற்கொன்று தொடர்பேதும் இன்றி அறிவித்துள்ளன: இன்ன அரசர் இன்னகாலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/127&oldid=578901" இலிருந்து மீள்விக்கப்பட்டது