பக்கம்:திருமாவளவன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 திருமாவளவன்

வாழ்ந்தவர்; அவருக்கு முன் ஆண்டவர் இன்னர்; அவருக் குப்பின் அரசுகட்டில் ஏறினுேர் இன்ன அரசர் ; அவர் காலத்தே, அண்மையில் உள்ள பிறகாட்டை ஆண்டிருந்த அரசர்கள் இவர்கள் என்று வரையறுத்துக் கூறும் வாய்ப் புடையன அல்ல அப்பாக்கள். அப்பாக்கள் பாடப் பெற்ற கால்ம், பாடிய புலவன், பாடப்பெற்ற அரசன், பாடுதற்குளற்ற காரணம் ஆக இவ்விளக்கம் ஒன்றையும் அவை அறிவிப்பன அல்ல ; இவ்விளக்கத்தை அளிப்பன. அப்பாக்களைத் தொடர்ந்து, அவற்றின் வேருய் எழுதப் பெற்றிருக்கும் கொளுக்களேயாம். இக் கொளுக்கள் தாமும், பாக்களைப் பாடிய புலவரால் எழுதப்பட்டன.அல்ல; பிற்காலத்தே, பழத்தமிழ்ப் பாக்களே, யாதோ ஒரு முறை வைத்து சிால்படத்தொகுத்த அறிஞர் ஒருவரால் எழுதப் பெற்றன ஆம். அப்பாக்கள் பாடப்பெற்ற காலத்திற்கும், அவற்றிற்கடியில் விளக்கம் எழுதப்பெற்ற காலத்திற்கும் இடையில் எத்துணை காலம் கழிந்திருக்கும். அத்தனை காலம் கழித்த எழுதப்பெற்ற அவ்விளக்கங்கள் எத்துணை உண்மை வாய்ந்தன என்பதெல்லாம் கம்மால்கூற இயலாது எனினும், அவை தவறு டையன எனச் சான்றுவழி நிறுவப்படும்வரை, அவை அறிவிக்கும் செய்திகள் உண்மையவே என்றே கொள்ளுதல்வேண்டும். புறநானூறு முதலிய பாடல்களுக்கு அடியில் விளக்கம் அளிக்க எழுதப் பெற்ற கொளுக்களின் நேர்மை குறித்து, திருவாளர் - P. T. சீனிவாச அய்யங்கார் அவர்கள் கொண்டுள்ள மாறு பட்ட கருத்துக்களே' எடுத்துக்கொண்டு, அவற்றின் நேர்மைகுறித்து ஐயங்கொள்ளும் அவர்போக்குச் சரி யன்று என்பதை வரலாற்றுப் பேராசிரியர் திருவாளர் நீலகண்டசாஸ்திரியார் அவர்கள் நிறுவியுள்ளார்கள்."

1. History of the Tamils. `°ège.4iffi4, 2. Studies in chola History and Administration—Page, 7-18.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/128&oldid=578902" இலிருந்து மீள்விக்கப்பட்டது