பக்கம்:திருமாவளவன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் 117

மேலும், சங்கஇலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப் படும், சில ஊர்ப்பெயர்கள், வரையறுத்துக் கூறப்பெறும் அரசியல் எல்லைகள் முதலாயின, கி. பி. முதல் நூற்ருண் டில் நம்நாடு வந்துசென்ற சில நூல் பேராசிரியர்களாகிய பிளேனி, தாலமி முதலியோராலும், அக்காலத்தே எழுதப் பெற்றதாகிய பெரிபுளுஸ் என்ற நூலாசிரியராலும், அறி யப்பட்டு, அவர்கள் குறிப்புக்களில் எழுதப்பட்டுள்ளன என்பதொன்றே, சங்க இலக்கியம் தரும் சான்றுகள் கொள்ளத்தக்கன அன்றித் தள்ளத்தக்கன அல்ல என்பதை உறுதி செய்யும்.

நந்தர் தலைநகர் பாடலிபுத்ரம் ; அது கங்கையாற்றின் கரைக்கண் அமைந்தது; பதுமம் என்னும் பேரெண் அளவு பெரும்பொருள் படைத்து அதல்ை மகாபதும நந்தன் எனச் சிறப்புப் ப்ெயர் பெற்ருன் என்று வடநூல்களால் பாராட்டப்பெறும் நந்த அரசன் ஒருவல்ை ஈட்டப்பட்டுப் பாடலியில் கிரண்டிருந்த பெரும்பொருள், பின்னர் மாற். முர் படையெடுப்பினல் அழியாவண்ணம், அன்னேர், கங்கையாற்றின் அடியில் சுருங்கை செய்து மறைத் து வைக்க், அப்பொருள் மறைந்து ஒழிந்தது; என்ற இச் செய்திகள், மாமூலனர் என்ற புலவர் பெருந்தகையாரால் சங்க இலக்கியங்களுள் ஒன்ருகிய அகநானூற்றில் குறிக்கப் பட்டுள்ளன; இச் செய்திகள், அப்பாக்களுக்கடியில் காணப்பெறும் கொளுக்கள் வழியாக அன்றி, அப்பாக்" களிஞலேயே அறிவிக்கப்படுகின்றன. . - -

1. நந்தன் வெறுக்கை, ! -அகம். 251.

'பல்புகழ் கிறைந்த வெல்போர் நந்தர்

சீர்மிகு பாடலிக் குழிஇக் கங்கை நீர்முதல் காந்த கிதியம்.” -அகம். 265.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/129&oldid=578903" இலிருந்து மீள்விக்கப்பட்டது