பக்கம்:திருமாவளவன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 திருமாவளவன்

விஷ்ணுபுராணம், மகாவம்சம் முதலாயினவும், யுவான் லாங் என்ற சீன யாத்ரீகன் குறிப்பும், மகாபத்மநந்தன் பெரும்பொருள் சேர்க்கும் பேராசைக்காரன் என்றே குறித்துள்ளன என்றும், பாடலிபுத்ரத்தில் உள்ள அசோக அடையவை என்று பொதுவாகக் கொள்ளப்படும் ஐந்து ஸ்தாபிகள், நந்த அரசன் ஒருவனுடைமை என்றும், அவை அவனுடைய பொக்கிஷங்களாம் என்றும் கூறும் வழக் காறு ஒன்று உண்டு என்றும் போசிரியர் சிமித் என்பார்

கூறுவர்."

மோரியர் என்ற வடகாட்டு அரச மரபினர், தென் குட்டை வென்று அடிப்படுத்தும் கருத்துடன் தேர்ப் படைசூழத் தெற்கு நோக்கிவந்தனர். வத்தார்க்குத், தென்னுட்டில் மோகூர் மன்னன் பழைப்னும், கோசரும் ஒருவரோடு ஒருவர் பகைத்துப் போரிட்டுக்கொண்டிருந்த கிகழ்ச்சி வாய்ப்பாக அமைந்தது; இதில், அவர்கள், கோசர்க்குப் பணியாது கின்ற மோகூர் மன்னளுேடு பகைத்துப் போரிட்டனர்; இத்தென்னுட்டுப் படையெடுப் பில், மோரியர்க்குத் துணையாக வடுகர் என்பார் முன் வந்தனர்; அம்மோரியர் கொணர்ந்த தேர்கள் எளிதில் செல்லுமாறு மலைகள் அழிக்கப்பெற்றப் பெருவழிகள் செய்யப்பட்டன என்ற இச்செய்திகள் சங்க இலக்கியங்க ளால் பெறப்படுகின்றன." . .

1 “The Early History of India.” —V. A. Smith. Page. 37. 2 of அனேகா லன்ன அனதேர்க் கோசர் -

தொன்மூ காலத் தரும்பனைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திாங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியா மையிற் பகைதலே வந்த மாகெழு தானே வம். மோரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/130&oldid=578904" இலிருந்து மீள்விக்கப்பட்டது