பக்கம்:திருமாவளவன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் 119.

கி. மு. 321 முதல் 281 வரை, வடகாடாண்ட மெளரி யப் பேர் அரசர்கள் சந்திரகுப்தன், பிந்துசாரன், அசோ கன் ஆகிய மூவருள் அசோகன் கலிங்கம் தவிர பிற இடங் களில் போர் புரியவில்லை என்பது தெளியப்பட்டது; ஆயி, லும் அவன் ஆட்சி வேங்கடமலைவரை பாவியிருந்தது என் பது வரலாற்று உண்மை; சக்திாகுப்தன், தன் ஆட்சிக் காலம் முழுவதும், வடநாட்டில் வெற்றியுடன் விளங்கிய கிரேக்க அரசுகளை அடக்கித் கணக்கென ஒரு பேர் அரசை அமைத்துக்கொண்டு, அதை அமைதி கிலவிய ஆட்சியாக அமைப்பதிலேயே கிற்கவேண்டியவனுகிவிட்டான். ஆகவே அவன் காலத்திலேயே தென்னடு மெளரியர் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது என்று கொள்வதற்கில்லை ; ஆகவே, விந்தியத்திற்கும், வேங்கடத்திற்கும் இடைப்பட்ட நாடுகள் பிந்துசாான் காலத்திலேயே (கி. மு. 297-273) மெளரிய ஆட்சியின் கீழ் வந்திருத்தல் வேண்டும். இக் கருத்தையே வரலாற்றுப் பேராசிரியராகிய சிமித் அவர்களும் கூறுகின் முர். பிந்துசாரனுடைய இத்தென்னுட்டுப் படை யெடுப்பே, சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மோரி பர் படையெடுப்பாகும். -

நந்தர் ஆட்சி கி. மு. 871 முதல் கி. மு. 821 வரை நிலவியது. மெளரியப் பிந்துசாரன் ஆட்சிக்காலம் கி. மு. 297 முதல் கி. மு. 278 வரை நிலவியது ; ஆகவே பாடலி யில் பெரும்பொருள் சேர்த்துவைத்த கந்த அரசனும்,

புனேதேர் நேமி யுருளிய குறைத்த இலங்குவெள் ளருவிய அறைவாய்." (ஆ) முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்

தென்றிசை மாதிரம் முன்னிய வாவிற்கு விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத்து ஒண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த அறை. -அகம் 289. 1. “The Early History of India " —W. A. Smith. Page. 139.

-அகம். 251

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/131&oldid=578905" இலிருந்து மீள்விக்கப்பட்டது