பக்கம்:திருமாவளவன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமாவளவன்


1. தோற்றுவாய்

இமயம் முதல் குமரி வரை பரவியுள்ள இந்தியப் பெருநிலப்பரப்பில், மிகப் பழங்காலத்தே தோன்றிய அரசுகள் பலவற்றுள், தெற்கே லேங்கடம் குமரிகட்கு இடைப்பட்ட சேர, சோழ, பாண்டிய அரசுகளே மிகச் சிறந்த அரசுகளாம் என்பது, வரலாற்று ஆசிரியர் பலரானும் ஒப்புக்கொள்ளப்பெற்ற உண்மையாகும். இப்பேர் அரசுகள் மூன்றும், மேற்கே உரோமானியப் பேர் அரசும் கிழக்கே சீனப் பேர் அரசும் சிறந்து விளங்கிய அக்காலக்திலேயே, அவற்றோடு ஒப்பச்சிறந்து விளங்கிய பழமையும் பெருமையும் உடையனவாகும். இவ்வரசுகள் இன்ன காலத்தே தோன்றின என்றோ, இன்னாளால் தோற்றுவிக்கப்பட்டன என்றோ, அறுதியிட்டுக் கூறமாட்டாப் பழமை வாய்ந்தன. இவ்வரசுகளின் பழமை பற்றிக் கூறும் வந்த ஆசிரியர் பலரும், "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே மூத்தகுடி," "படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வரும் குடிகள்,” என்றே கூறி அமைவாராயினர். வடமொழி இராமாயண ஆசிரியர் வான்மீகியாராலும், அம்மொழிப் பேரிலக்கணப் பேராசிரியர் காத்தியாயனசாலும், தங்கள் நூல்களில், சீரும், சிறப்பும் பெற்ற நாடுகளாக, இந்நாடுகள் கூறப்பட்டுள்ளமையாலும், இந்திய நாட்டின் பெரும்பகுதியினை வென்று ஒரு குடைக்கீழ் வைத்து உலகாண்ட மவுரியப் பேர் அரசன் அசோகனால்

தி.–1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/13&oldid=1273176" இலிருந்து மீள்விக்கப்பட்டது