பக்கம்:திருமாவளவன்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் 125,

பல்லவமன்னன் விஷ்ணுகோபனை (கி பி. 840)ப் பல்லவன் என்ற இனப்பெயர் கொடுத்துக் குறிக்காது, காஞ்சி மன்னன் என்று மட்டுமே குறிப்பிடுகின்றது ; இதல்ை, நான்காம் நூற்ருண்டில் பல்லவர் என்றபெயர் பெருவழக் கில் இல்லை என்பது தெளிவாம். சங்க இலக்கியங்களில், காஞ்சி அரசர்கள், திரையர், கெர்ண்டையர் என்ற பெயர் களால் அழைக்கப்பட்டுள்ளனர்; ஆகவே, சமுத்திரகுப்தன் படையெடுப்பின் போது, காஞ்சியை ஆண்ட விஷ்ணு. கோபலும் ஒரு திரையனே ; மேலும், தொண்டை. மண்டலப் பட்டயம், திரையர் இனத்தின் கிளைகள் பல வற்றை அறிவிக்கிறது ; அக்கிளைகளுள் ஒன்ருகப் “பல்லவ. திரையர் ” என்பாரும் உளர் ; இது, பல்லவரும், திரை பரும் வேறுவேறு அல்லர்; ஒருவரே என்பதை உறுதி செய்யும். இதனால், பல்லவர், அவர்கள் பொதுப்பெயர் அல்லது கூட்டுப்பெயராகிய, திரையர் என்ற பெயரால் சங்க இலக்கியங்களால் அறியப்பட்டனர் என்று கொள்ள லாம் ; மேலும், பரிசிலைத் தொண்டைப் பல்லவன்,' என்ற தொடரில் அவர்கள் பல்லவர் என்ற பெயராலும் அறியப்பட்டுள்ளனர் ; ஆகவே, பல்லவரை அறிந்து குறிக் கும். சங்க இலக்கியகாலம் பல்லவர் காலத்திற்குப் பிற். பட்டது, அல்லது அவர்கள் காலத்தது. ஆதல்வேண்டும்.

2. சங்கஇலக்கியங்களில், கு று கி ல ம ன் ன ரு ம். கொடைவள்ளல்களுமாக வேளிர்பலர் வரலாறு விளங்க உரைக்கப்பட்டுள்ளது. இவ்வேளிர் சளுக்கியரின் வேறு அல்லர் ; வேள்புல அரசர் சளுக்க வேந்தர்,” என்பது. திவாகரம் : திவாகாரைப் போற்றிப் புரந்தவள்ளல் அம்பர் கிழான் அருவந்தை என்பவன் ; இவ்வம்பர்கிழான் அரு. வந்தையைக் கல்லாடனுர் என்ற சங்ககாலப்புலவர் பாராட்டியுள்ளார். ஆகவே, அம்பர்கிழான் அருவந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/137&oldid=578911" இலிருந்து மீள்விக்கப்பட்டது