பக்கம்:திருமாவளவன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திருமாவளவன்

லும், புகார் நகரின் கண் வாழ்ந்த கற்புடைமகளிர் எழுவர் வரலாற்றை எடுத்துக் கூறி, அவர்கள் பிறந்துவாழ்ந்த புகார் நகரில் பிறந்த நான் எனக் கண்ணகிகூறும் எழுவரில்

ஒருவராக மன்னன் கரிகால் வளவன்மகளும் கூறப்

படுதலின், அவளும், அவள் தந்தை கரிகாலனும் கண்ணகி காலத்திற்குமுற்பட்டவர் என்பது பெறப்படும் ஆதலாலும் கரிகாலன், செங்குட்டுவன் காலத்தவன் அல்லன் , அவனுக்கு முற்பட்டோன் என்பதையே சிலப்பதிகாரமும், மணிமேகலையும் உறுதிசெய்கின்றன. இருவர்க்கும் இடைப் பட்ட காலம், ஒரு நூறு ஆண்டு என்று கொண்டு-அவ் வாறே கொள்வர்பலர்-செங்குட்டுவன் காலம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டு என்பதையும் கொண்டுநோக்கி ல்ை, கரிகாலன் காலம் கி. பி. முதல் நூற்ருண்டு என்பது முடிவாதல் காண்க. இம்முடிவு, முன் காம் வேறுவகை யால் பெற்ற முடிவை அாண்செய்தல் காண்க.

o,

இனி, சங்க இலக்கிய காலம் கி. பி. இரண்டாம் மாற்

முண்டன்று : ஐந்தாம் நூற்ருண்டே என்று கொள்வாரும் உளர். தம் கொள்கைக்குச் சான்முக அவர் கொள்வன:

1. சமுத்திரகுப்தனுடைய (கி.பி. 826-875) அலகா பாத் கற்றாண் கல்வெட்டு, அக்காலக் காஞ்சியை ஆண்ட

1. இருகில மருங்கில் பொருநரைப் பெரு.அச் செருவெங் காதலிற் றிரு மா வளவன்... புண்ணியதிசைமுகம் போகிய அக்ாள்,"

-சிலம்பு. இச்சி 89.94

'கரிகால் வளவன் தண்பதம் கொள்ளும் தலைநாள்.'

  • மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள்

இக்ாகர் போல்வதோர் இயல்பினதாகி." -

. . . . . . -மணி : விழா : 39-40.

-சிலம்பு. கடலாடு:159. * :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/136&oldid=578910" இலிருந்து மீள்விக்கப்பட்டது