பக்கம்:திருமாவளவன்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் 123,

ஒன்ருக வைத்து எண்ணப்படுகிறது. எனினும் பத்தப் பாட்டு, எட்டுத்தொகை நூல்களை நோக்க, காலத்தால் சிறிது பிந்தியது என்பது வரலாற்று ஆசிரியர்களும், இலக்கியங்களில் ஆளப்படும் சொல் அமைப்பு, இலக்கண அமைப்புக் கொண்டு, அவ்விலக்கியங்களின் காலவே று பாட்டைக் கானும் மொழி நூல் ஆசிரியர்களும் முடிவு செய்யும் முடிவாம். ஆகவே, பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களால் அறியப்படும் கரிகாலன், சிலப்பதி காரத்தால் அறியப்படும் செங்குட்டுவனுக்குக் காலத்தால் முற்ப்ட்டோன் என்பது துணியப்படும். -

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார் க்கு கல்லார், கண்ணகி வரலாறு, கரிகாலன் காலத்தில் கடக் தது என்ற கவருன கருத்துடையவராதலின் மூலப்பகுதி யில் சோழ அரசனைக் குறிக்கும் சொற்ருெடர் வருமிட மெல்லாம், அச்சொற்ருெடரால் குறிக்கப்படும் சோழ அரசன் கரிகாலன் என்றே பொருள்செய்துள்ளார் எனி உம், இளங்கோவடிகள் அச்சொற்ருெடர் எல்லாம், குறிப்பாகவேனும் கரிகாலனைக் குறிக்கும் வகையில் அமைக்காது, பொதுவாகச் சோழ அரசன் என்ற பொருள் தோன்றவே கூறிச்செல்கின்ருர் ஆதலாலும், செங்குட்டுவன் . காலத்தில் வாழ்ந்த சோழ அரசன் கரிகாலன் அல்லன்; அவனுக்குப் பிற்பட்ட வேறு ஒரு சோழ அரசனே என்பதைக் குறிக்கும் சான்றுகள் பல, அச் சிலப்பதிகாரத்திலேயே காணக்கிடப்பதாலும், இளங்கோவடிகளும், அவர்காலப் புலவரும் அவர் எண் பரும் ஆகிய சாத்தனரும், கரிகாலனைத் தம்முடைய நூல் களில் குறிப்பிடும் போதெல்லாம் அவன் இறந்த காலத்தில் வாழ்க்தோன் என்பது தோன்றவே கூறுகின்றனர். ஆதலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/135&oldid=578909" இலிருந்து மீள்விக்கப்பட்டது