பக்கம்:திருமாவளவன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 திருமாவளவன் -

கூறுகின்றது . இவன் இலங்கை அரசர்களுள் முப்பத் தொன்பதாக வைத்து எண்ணப்படுவான் என்றும், இவன் காலம் கி. பி. 177-199 என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே, சோன், செங்குட்டுவன் கி. பி. இரண்டாம் நூற்ருண்டில் வாழ்ந்தவன் என்று வரலாற்று ஆசிரியர்கள் முடிவு செய்வர். மேலும் செங்குட்டுவன் வடகாடு சென்ற காலை, கங்கையைக் கடக்க, நூற்றுவர்கன்னர்’ என்பார் துணைபுரிந்தனர் எனக் கூறப்பட்டுளது; அவ்வாறு துணை செய்தோன், அக்காலே வடநாடு முழுவதும் வெற்றிவிளங்க அரசாண்டு வந்த ஆந்திரப் பேர் அரசர் மரபில் வந்த ஆங் திரச் சதகர்ணி, யக்ஞபூரீ என்பவனே என்றும், அவன் ஆட்சிக்காலம் கி. பி. 184-218 என்றும் முடிவு செய்வர் வரலாற்று நூலார். இச்செய்தியும், சேரன் செங்குட்டு வன் கி. பி. இரண்டாம் நூற்ருண்டைச் சேர்ந்தோன் என் பதை உறுதி செய்வது காண்க.

சேரன் செங்குட்டுவன் வரலாற்றை விரித்துறைக்கும் நூல் சிலப்பதிகாரமாகும் , அதனே இயற்றிய ஆசிரியர் இளங்கோவடிகள் செங்குட்டுவன் உடன்பிறந்தவரே ; ஆத லின், சிலப்பதிகாரம், செங்குட்டுவன் காலத்திலேயே எழு. தப்பட்டதாகும். சிலப்பதிகாரம் சங்க இலக்கியங்களுள்

1 'வேற்றுமை இன்றி நின்னெடு கலந்த

அாற்றுவர் கன்னர்.”

"சேனை செல்வது

அாற்றுவர் கன்னர்க்குச் சாற்றி ஆங்குக்

கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன வங்கப் பெருகிரை செய்கதாம்."

' கங்கைப் பேர்யாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பாப்பின் வடமருங் செய்தி."

-சிலம்பு : கால் கோள்: 148-49 :162-65;176-77,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/134&oldid=578908" இலிருந்து மீள்விக்கப்பட்டது