பக்கம்:திருமாவளவன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் . . 121

அவனுடைய கல்வெட்டுக்களில் சிறப்பாகக் குறிப்பிடப் பட்டுள்ளமையால், கி. மு. மூன்ரும் நூற்ருண்டிலேயே வர லாற்று நூல்களால் அறியப்பட்டனர்; எனினும் சங்க காலத் தமிழ் அரசர்களுள் முதன்முதலாகக் காலத்தொடு படுத்துக் கூறத்தக்கோன் சேரன் செங்குட்டுவனே. செங் குட்டுவன் கண்ணகிக்குக் கோயில்கட்டி வழிபட்ட ஞான்று, அவ்விழாக்காண வந்திருந்த அரசர்களுள், கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பவனும் ஒருவன். இலங்கை வரலாற்றைக்கூறும் மகா வம்சம் என்ற நூல், கயவாகு என்ற அரசன், நள்ளிருள் யாமத்து நகர் சோதனை செய்து வருகின்றபோது, நரைத்த முதுமகள் ஒருத்தி பெருங்குரல் பாய்ச்சி அழக் கண்டு, அன்னவள் இன்ன லுக்கு ஏது, ' பன்னெடு நாளேக்கு முன்னர்ப் படையெடுத் துப்போந்த கரிகால்வளவன், சிங்களக்குடிகள் பலவற் றைச் சிறைப்படுத்துச்சென்ற ஞான்று, தன் குடிக்கு ஒரு மகனேயும் தான்கொண்டு போயினமையே எனக்கேட்டுச் சோணுட்டின்மீது, படையெடுத்து வந்து தன்னகர்க் குடி களைச் சிறையினின்று விடுவித்தனன்' என்ற வரலாற்றைக்

1. (அ) " அது கேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகுவென் பான், கங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்ட முந்துறுத் தாங்கு அாந்தை கெடுத்து வாக்கருமிவளென ஆடித்திங்கள் அகவையினங் கோர் பாடிவிழாக்கோள் பன்முறை யெடுப்ப மழைவீற்றிருந்து வளம் பல பெருகிப் பிழையா விளையுள் காடாயிற்று" .

  • - - -சிலம்பு : உரைபெறு கட்டுரை.

(ஆ) ' குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்

கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் எக்காட் டாங்கண் இமயவரம்பனின் கன்னட் செய்த காளணி வேள்வியில் வந்தி கென்றே வண்ங்கினர் வேண்ட"

-சிலம்பு, வார்கருகாதை 159-163.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/133&oldid=578907" இலிருந்து மீள்விக்கப்பட்டது