பக்கம்:திருமாவளவன்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் 127

வர்க்கு உரைத்தல் என்ற முறைப்படியே பேச்சு வடிவிலேயே வந்து, பின்னரே எழுதப்பட்டது என்ப. இச்செய்தியை அறிவிப்பவர், அவ்வுரையைக் கேள்வி வழி யாகக் கேட்டவருள் கடைசி மானுக்கரும், அதை முதன் முதல் முத்துவடிவில் கொணர்ந்தவரும் ஆகிய ஒருவரே. அவர் நடையில், நெல்வேலி, சங்கமங்கை என்ற இடங்களில் வெற்றி பெற்ற பாண்டிய மன்னணுகிய அரிகேசரி பராக்குசன், நெடுமாறன் என்றபெயர் பயிலவழங்கப் பட்டுள்ளது. இதனுல் அம்மன்னன் காலத்திலேயே அவ் வுரை எழுத்துருப்பெற்றது என்று கொள்ளலாம். அம் மன்னன் கி. பி. 670 முதல் 710-வரை ஆண்டவனுவன்; ஒரு தலைமுறைக்காலம் 20 ஆண்டுகள் என்று கண்க்கிட் டால் (870-200 (20x1)=47), அவ்வுரை எக்சோால் எழுதப்பட்ட காலம் கி. பி. 410 என்று ஆகிறது. ஆகவே, சங்ககாலம் ஐந்தாம் நூற்ருண்டைச் சேர்ந்ததே. -

5. புத்தன் பிறந்த காட்டையும், அம்மதம் சிலவிய காடுகளையும் காண்பதே குறிக்கோளாகப் புறப்பட்ட சீனர்களுள் பாகியான் (Fa-hie) என்பவன் (கி. பி 899-414) ஐந்தாம் நூற்ருண்டின் தொடக்கத்தில், சுமத்ரா ஜாவா முதலிய நாடுகளுக்குச் சென்றதாலே அங்கே புத்த மதம் அழிந்து, வைதீகமதம் வாழ்வதைக்கண்டு எழுதியுள் ளான். கி. பி. 670-ல் அங்குச்சென்று ஆறு சிங்கள் வ ை தங்கியிருந்த இக்வலிங் (ltsing) என்ற மற்ருெரு சீனன், அங்கே புத்தமதம் சிறந்து விளங்குவதை விரித்துரைத்துள். ளான். ஆக, இவ்விருவர்க்கும் இடைப்பட்டகாலத்தே, (கி. பி. 414-67). அங்கே, புத்தமதம் பரவத் தொண்டு செய்த வர் ஒருவர் இருத்தல்வேண்டும். மணிமேகலை, சாவககாடு சென்று, அந்நாட்டு அரசன் புண்ணியாசன் தன் பழம் பிறப்புணரத் துணைசெய்தாள் எனவும், அங்கே அரச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/139&oldid=578913" இலிருந்து மீள்விக்கப்பட்டது