பக்கம்:திருமாவளவன்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திருமாவளவன்

னுக்கு அறவுரை அளித்திருக்கும் தருமசாவகன் என்ற முனிவனேயும் கண்டு வந்தாள் எனவும் மணிமேகலை கூறு கின்றது ; ஆகவே, பாகியான் காலக்கே சீர்குலைந்திருந்த புத்தமதம், இத்வலிங் காலத்தே சிறப்புற்றிருந்ததற்குக் காரணமாய் இருப்பது, மணிமேகலையின் சமயக்கொண்டே. ஆகவே, மணிமேகலை இவ்விருவர்க்கும் இடைப்பட்ட காலத்திலேயே வாழ்ந்தவளதல் வேண்டும் என்று கொண்டு, சங்ககாலம் ஐந்தாம் அநூற்ருண்டே என்பர் சிலர். 6. தன் காலத்தில், புத்தமதம் தமிழ்நாட்டில் நன்கு வளர்ந்திருந்ததாகப் பாகியான் (899-414) கூறுகின்ருர் ; தமிழ்நாட்டில் புத்தமதம் தழைக்கவில்லையே என்று அற வன அடிகள் என்பார் மனங் கவல்வதாக மணிமேகலை அறிவிக்கின்றது; பாண்டியகாட்டில் புத்தமதம் தழைக்க வில்லையாயினும், பல்லவகாட்டில் அது மக்கள் அனைவரா அம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக, கி. பி. 640-ல், பல்ல வர் தலைநகர் காஞ்சியில் தங்கியிருந்த இயான்சாங்,” (Hiuen Tsang) என்ற சீனர் கூறுகின்ருர். ஆகவே, மணிமேகலை குறிப்பிடும், புத்தமத வீழ்ச்சி பாகியானுக்குப் பிறகே தோன்றி யிருத்தல்வேண்டும். ஆகவே, மணிமே கலை காலம் கி. பி. ஐக்தாம் நூற்ருண்டே ; ஆகவே, சங்க காலமும் அஃதே. - •- . . . ; சங்ககாலம் ஐந்தாம் நூற்ருண்டே என்பார் மேலே காட்டிய சான்றுகளின் தகுதிப்பாட்டை இனி முறையாக ஆராய்ந்து காண்போம். . . . . . . . . i. - கி. பி. நான்காம் நாற்ருண்டைச் சேர்ந்த செப் புப்பட்டயங்கள் பலவும் காஞ்சி மன்னர்களைப் பல்லவர் . என்றே குறிப்பிடுகின்றன. ஆகவே, அலகாபாத் கல். வெட்டு அவர்களைப் பல்லவர் என்று குறிப்பிடாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/140&oldid=578914" இலிருந்து மீள்விக்கப்பட்டது