பக்கம்:திருமாவளவன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் 129

ஒன்றைக்கொண்டே நான்காம் நூற்ருண்டில் பல்லவர் என்ற பெயர் பெருவழக்கில் இல்லை என்று கொள்வது சரி யன்று; மேலும்,காஞ்சி மன்னன் விஷ்ணுகோபனேப் பல்ல வன் என்று குறிப்பிடாது, காஞ்சிமன்னன் என்றுமட்டும் குறிப்பிடும் அவ்வலகாபாத் கல்வெட்டு, அவனைத் திரை யன் என்றும் குறிப்பிடவில்லை; ஆகவே, அக்காலைப் பல்ல வர், திரையர் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர் என்று கொள்வது சரியன்று. மேலும், காஞ்சிமன்னர்களைத் திரையர், தொண்டையர் என்ற பெயரால் அழைக்கும் வழக்கமும், கரிகாலன் காலத்திற்குப் பின்பே காணப்படு கிறது ; அதற்கு முற்பட்ட காலத்திலெல்லாம், காஞ்சி மன்னர்கள், அருவாளர் என்ற பெயரினலேயே அழைக் கப்பட்டுள்ளனர். இது, 'காஞ்சியும் கரிகாலனும்” என்ற தலைப்பின்கீழ் விளங்க உரைக்கப்பட்டுள்ளது. பல்லவர்க் கும், திரையர்க்கும் தொடர்பு உள்ளதாகக்கூறும் தொண் டைமண்டலப் பட்டயம், மிக மிகப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒன்று ஆகவே, அது கூறும் சான்று ஏற்கத்தக்க தன்று. 'பரிசிலைத் தொண்டைப் பல்லவர் ஆணையின்' என்ற தொடர் அமைந்த செய்யுள், தொல்காப்பியம் பொருளதிகாரம், அகத்திணையியல் ஐம்பத்துநான்காம் சூத்திரத்தின் உரையில், மேற்கோட் செய்யுளாக ஆசிரி யர் நச்சினர்க்கினியரால் ஆளப்பட்டுளது என்பதல்லது, அஃது இன்னகாலத்தது, இன்னரால் இயற்றப்பட்டது என்பதெல்லாம் அறிய இயலாது. பதின்ைகாம் நாற் ருண்டைச்சேர்ந்த உரையாசிரியர் ஒருவரால் கையாளப் படும் மேற்கோள் செய்யுளில் வரும் ஒரு தொடரை, நான் காம் நூற்ருண்டு நிகழ்ச்சியை உறுதிசெய்யும் சான்ருகக் கொள்வது நேரிதன் று. பல்லவர், திரையர் அல்லர். திரையர் முற்றிலும் தமிழ்ப்பண்பு வாய்ந்தவர்; பல்லவர்,

தி.-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/141&oldid=578915" இலிருந்து மீள்விக்கப்பட்டது