பக்கம்:திருமாவளவன்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 திருமாவளவன்

தமிழ்ப் பண்போடு முற்றிலும் மாறுபட்ட பண்புவாய்ந்த வர் என்பதே வரலாற்று ஆசிரியர் பலர் கருத்தாம். மேலும், விஷ்ணுகோபனே பல்லவமாபின் முதல் அரசன் என்று கொள்வதற்கு இல்லை; அவனுக்கு முன்னும் பல பல்லவ அரசர்கள் வாழ்ந்துள்ளனர். ஆகவே, விஷ்ணு கோபன் காலமே பல்லவர் தோன்றிய காலம்; அவர்க்கு முந்திய காலத்தே பல்லவர் இல்லை என்று முடிவுசெய்வது முறையாகாது. ஆக, இதுகாறும் கூறியவற்ருல், பல்ல வர்க்கும், திரையர்க்கும் தொடர்புடையதாகக்கூறி, அதைச் சான்முகக்கொண்டு, சங்க இலக்கியகாலம் கான்காம் நாற் ருண்டிற்குப் பிற்பட்டதே என்று முடிவுசெய்வது முரண் பட்டதாகும் என்பது விளக்கப்பட்டது. - - 2. சங்கஇலக்கியங்களில் வரும் வேளிர்கள் முற்றி லும் தமிழ்ப்பண்பு வாய்ந்தவர்; தமிழ் வளர்த்தவர் ; தமிழ்ப் புலவர் பலரைப் பேணியபெருவள்ளல்கள் ஆவர் ; ஆனல், சளுக்கியரோ, எனின், தமிழ்ப்பண்போடு முற்றி அம் மாறுபட்டவர்; ஆக மொழியால், பண்பால் முற் அம் மாறுபட்ட இருவரை, திவாகரர், வேளிரும், சளுக் கியரும் ஒருவரே எனக்கூறியது ஒன்றையே கொண்டு இருவரும் ஒருவரே என்றுகூறித் தொடர்புபடுத்துவது சரியன்று. சங்ககாலத்திற்குப்பின் இருநூறு, முந்நாறு ஆண்டுவரை, தமிழக வரலாற்றில் இருள்கிலேயை உண் டாக்கிவிட்டனர் களப்பிரர் என்ற ஓர் இனத்தார் ; இவர் கள் தோற்றம், வரலாறு முதலாயின அறியக்கூடவில்லை எனினும், இவர்கள் தெற்கிலிருந்து வடநாடு சென்றவால் லர் ; மாருக, வடக்கேயிருந்தே தென்னடு நோக்கிவந்த வர் என்பது உண்மை. ஆக, இவர்கள், தமிழ்நாட்டில் சங்ககாலத்திற்குப்பின் நுழைந்தனர். எனின், அதற்கு முற்பட்ட காலத்தே இவர்கள். சளுக்கியர் காட்டில் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/142&oldid=578916" இலிருந்து மீள்விக்கப்பட்டது