பக்கம்:திருமாவளவன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் 181

தவராதல் வேண்டும். இவர்கள் உண்மையிஞலேயே, சளுக்கியர் அப்போது அறியப்படாமல், களப்பிரர் அழி விற்குப் பிறகு கி. பி. ஐந்தாம் நூற்ருண்டில் அறியப்பட் டவராதல் வேண்டும். ஆகவே, வரலாற்றிற்குத் தெரிந்த முதல் சளுக்கிய அரசனும், ஐந்தாம் நூற்ருண்டைச் சேர்க், தோனும் ஆகிய ஜயசிம்மனுக்குமுன், சளுக்கியர் வரலாறு அறியப்படவில்லை என்பதைக்கொண்டே, அவனுக்குமுன் சளுக்கியர் இனமே இல்லே என்று முடிவுசெய்வது முறை யாகாது. இருந்தனர்; ஆனல், அவர்கள் வரலாறு அறி யப்படவில்லை என்றே கொள்ளுதல்வேண்டும். வரலாற் றுக் குறிப்புக்களால், அறியப்படவில்லை எனின், பிற முறையால் அறியப்படல் இயலாது என்று கொள்ளுதல் கூடாது; வரலாற்றிற்குத் தோன்ருத அவர்கள், இலக் கியங்களுக்கு அறிந்தவராக இருத்தல்கூடும். அகனலேயே திவாகரர் அவர்களே அறிந்து கூறியுள்ளார். சளுக்கியர் ஐக் தாம் நூற்ருண்டிற்குமுன் இருந்தனர் என்று காட்டும் வர லாற்றுக் குறிப்புக்கள் கிடைக்கவில்லை ; ஆகவே அவர்கள்

தோன்றிய காலம் அதுவே ; அவர்களே அறிந்துள்ளார் திவாகரர்; ஆகவே திவாகரர் காலம் ஐந்தாம் நூற்ருண்டே, திவாகாரைப் புரந்த அம்பர்கிழான் அருவந்தையை, சங்க காலப் புலவராகிய கல்லாடர் பாடியுள்ளார் ; ஆகவே, கல்லாடரும், அவர் வாழ்ந்த சங்க காலமும், ஐந்தாம் நூற் முண்டைச் சேர்ந்தவரே என்று கொள்வதினும், சங்க காலம் இரண்டாம் நூற்ருண்டைச் சேர்ந்தது; திவாகார் சங்ககாலத்தவர் ; அவர் சளுக்கியரை அறிந்துள்ளார் : ஆகவே, சளுக்கியர் வரலாறு ஐந்தாம் நூற்றண்டி லிருந்தே முறையாகக் காணக்கிடைக்கிறது. எனி

லும் அவர்கள் இனம் கி. பி. முதல் அல்லது இரண்டாம் - நூற்ருண்டிலிருந்தே இருந்து வருகிறது என்று கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/143&oldid=578917" இலிருந்து மீள்விக்கப்பட்டது