பக்கம்:திருமாவளவன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 திருமாவளவன்

வதே முறையாகும். ஆக, திவாகாம், சளுக்கியர் கால நிலையை அறிவதற்குத் துணை புரிகிறது என்று கொள்ள வேண்டுமே ஒழிய, அது சங்க இலக்கியங்களின் கால நிலையை அறியும் வாயிலாக உளது என்று கொள்ளுதல்

அம்.டரி ஆ1.

8 மணிமேகலை குறிப்பிடும் குச்சாக்குடிகை என் பதற்கு டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் கொள் ளும் பொருளைய்ே பொருளாக எல்லோரும் ஏற்றுக் கொள்வதில்லை. கூர்ச்சரத்துச் சிறந்த சிற்பிகளைக்கொண்டு அமைத்த கோயில் என்று அதற்குப் பொருள் கொள்வதே சாத்தனர் கருத்தாயின், அவர் மகதவினைஞர், மராட்டக் கம்மர், அவந்திக் கொல்லர், யவனத் தச்சர் எனப் பிற நாட்டுத் தொழிலாளரைத் தொகுத்துச் சிறப்பித்துக் கூறிய இடத்திலேயே, கூர்ச்சரச் சிற்பிகளையும் எடுத்தோ திச் சிறப்பித்திருப்பர். ஆனல் அங்கு அவர்கள் குறிப் பிடப்படவில்லை. ஆகவே, கூர்ச்சாத்தார் செய்த கோயில் என்று பொருள் கொள்வது முறையாகாது. திருவாளர் R. சத்தியநாதன் அவர்களும், பிறரும் பொருள்செய்வது போன்றே, அச்சொற்ருெடர் கல்லால் அமைந்த கோயில்” என்பதல்லது வேறு பொருள் தாாது என்று கொள்வதே நேரிதாம். இவ்வாறே அச்சொற்ருெடர் குறித்துப் பலரும் பலவிதமான பொருள் கூறுகின்றனர். ஆக, தெளிவற்றதும் பலபொருள்படும் பண்பு வாய்ந்தது மான ஒரு சொல் ஆளப்பட்டது ஒன்றே கொண்டு ஒரு பெரு நூலின் காலத்தை உறுதி செய்தல் ஒழுங்காகாது.

A. 4. இறையனர் களவியல் உரை அளிக்கும் செய்தி கள் பலவும் கற்பனை கலந்தவை. வரலாற்றுச் சான்ருக

1, “History of India." —R. Sathianathan. Page 212.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/144&oldid=578918" இலிருந்து மீள்விக்கப்பட்டது