பக்கம்:திருமாவளவன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் 183

ஏற்கும் தகுதியற்றவை. மேலும் இறையனர் களவியல் குறிப்பிடும் பாண்டிய மன்னன், அரிகேசரி பராங்குச நெடுமாறனே என்பதை ஏற்றுக்கொள்ள இயலாத சான்றுகள் பல அவ்வுரையிலேயே அடங்கியுள்ளன ; அம் மன்னன் நடத்திய போர்க்களங்களுள், பாழி, சென்னி லம், நெல்வேலி முதலியவற்ருேடு விழிஞம் என்னும் இட மும் குறிப்பிடப்படுகிறது. ஆனல் விழிஞப் போர் எட் டாம் நூற்ருண்டின் ஈற்றிலும், ஒன்பதாம் நூற்ருண்டின் முதலிலும் நடைபெற்றதாகவே கல்வெட்டுக்கள் அறிவிக் கின்றன". ஆகவே, வரலாற்ருேடு ஒத்துவாாது, முரண் படும் நிகழ்ச்சிகளையே கொண்டு கிற்கும் சான்று ஒன் றைக்கொண்டு பாண்டிய மன்னன் ஒருவன் காலத்தை முடிவு செய்து, அதைக்கொண்டு சங்ககாலத்தை உறுதி செய்தல் ஒழுங்கற்ற செயலேயாகும்.

5. சாவகத்தில் புத்த மதத்தை வளர்க்கும் பணி, ப்ாகியானுக்குப்(899-414)பின்னரே தொடங்கப்பெற்றது என்று கொள்ளவேண்டுவதின்று; அப்பணி, அவனுக்கு முன்னரே கூடத்தொடங்கப் பெற்றிருத்தல் கூடும். அப் பணியை மேற்கொண்ட மணிமேகலை, அதைப் பாகியான் சாவகம் வருதற்கு முன்னரே தொடங்கியிருத்தல் கூடும். ஆனால், அப்பணி, அவள் காலத்திலேயே முற்றிலும் பயன் அளிக்காது, அவளைத் தொடர்ந்து பாகியான் காலத்திற் குப் பிறகும் அப்பணியைப் பலர் மேற்கொண்டதன் விளை வாக கி. பி. 671ல் முழுப்பயன் அளித்திருத்தல் கூடும். காஷ்மீர் புத்தன், குணவர்மன் என்பவன், ஜாவாகாட்டு மன்னனையும், அவன் தாயையும், புத்தமதம் தழுவச்செய் தான் என்று பாகியான் என்பானே கூறியுள்ளான். மணி

1. The Pandyan kingdom —Page 55 (Foot-Note) 2. Sathynatham's History of India. Page 481. X

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/145&oldid=578919" இலிருந்து மீள்விக்கப்பட்டது