பக்கம்:திருமாவளவன்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 திருமாவளவன்

மேகலை சாவகம் சென்றது பாகியான் காலத்துக்குப் பின்னரே என்று கொள்வதற்குரிய சான்று ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் சாவகம் சென்ருள் என்பதல்லது அவள் சென்ற காலம் இது என்பதை மணிமேகலை அறி விக்கவில்லை. ஆகவே, மணிமேகல் சாவகம் சென்ற கிகழ்ச்சி ஒன்றையேகொண்டு, அது பாகியான் காலத்திற் கும் இத்சிங் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்திலேயே நிகழ்ந்திருத்தல் கூடும் என்று கற்பனை செய்துகொண்டு, அக்கற்பனேயே சான்ருகச் சங்கஇலக்கியத்தின் காலத் தைக்காண முயலுதல், கனவில் கண்டதை கினேவில் அடைய முயற்சிப்பதுபோலாகும். -

6. மணிமேகலையில் அறவண அடிகள் கொள்ளும் மனவருத்தம், வளர்ந்த புத்தமதம் மீண்டும் அழியத் தொடங்கியதைக் கண்டே என்று கொள்வதிலும் தமிழ் காட்டில் அது விரைவில் பாவத் தொடங்காமை கண்டே என்று கொண்ட்ால், அவர் காலத்தைப் பாகியான் காலத் திற்குப் பின் கொணர வேண்டிய நிலை ஏற்படாது. மாயோன், சேயோன், வருணன், வேந்தன் போன்ற வைதீகக் கடவுள்களின் வரலாறுகளை அறிவிக்கும் அக நானூறு, புறநானூறு போன்ற எட்டுத்தொகையைச் சேர்ந்த சங்கஇலக்கியங்கள், புத்தன்வரலாற்றை அறி விக்கவில்லை. ஆனல், அப் புத்தன் வரலாறு சங்க இலக்கி யங்களோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் தகுதியுடை யவேனும், காலத்தால், அவற்றினும் சிறிது பிற்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களில் விளங்க உன்ாக்கப்பட்டுளது. இதல்ை, அகம், புறம்போன்ற சங்க இலக்கியங்கள் எழுத்த காலத்தே, அம்மதம் தமிழ் காட்டில் துழையவில்லை; அவற்றிற்குப் பிற்பட்ட காலக் திலேயே அது வள்ரக் தொடங்கிற்று என்பது புலனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/146&oldid=578920" இலிருந்து மீள்விக்கப்பட்டது