பக்கம்:திருமாவளவன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் 135

மணிமேகலை காலத்தே அறவண வடிகள் வருந்தினர் எனின், அம்மதம் தமிழ்நாட்டில் விரைந்து பரவாமை கண்டே வருந்தினரல்லது, தமிழ்நாட்டில் அவர் காலத் துக்குமுன் நன்கு வளர்ந்திருந்த அம்மதம் அவர் காலத்தே அழியத்தொடங்கியது கண்டு வருந்தினால்லர். அகம் புறம்போன்ற எட்டுத்தொகை நூல்கள் காலத்தே காணப் படாத ஒரு மதம், அதை அடுத்த அண்மைக்காலத்தில், விரைந்து முழுவளர்ச்சி பெற்று, அந் நூல்களோடு ஏறக் குறைய ஒத்தகாலத்தில் தோன்றிய சிலப்பதிகார, மணி மேகலை காலத்திலேயே அழியவும் தொடங்கிவிட்டது என்று கொள்வது சிறிதும் பொருந்தாது. ஆகவே, தமிழ் நாட்டுப் புத்தமதத்தின் நிலையைக்கொண்டு சங்ககால இலக் கியத்தின் கால கிலையை அறியமுயலுதல் ஆகாத செயலே

யாம்.

ஆக, இதுவரை கூறியவாற்ருன், சங்க இலக்கிய காலம் ஐந்தாம் நூற்ருண்டே என்று கொள்வார், தமக்கு ஆதார மாகக் கூறிய சான்றுகள் ஏற்கும் தகுதியற்றன என்பது தெளிவாகவே, தாலமி, பிளைனி போன்ற பிறநாட்டு நில நூல் ஆசிரியர்கள் அளிக்கும் குறிப்புக்களும், இலங்கை வரலாறு மகாவம்சமும், சிலப்பதிகாரமும் அளிக்கும் குறிப்புக்களும் சான்ருகக்கொண்டு, சங்ககாலம் இரண் டாம் நூற்ருண்டைச் சேர்ந்ததே என்று முன்பு முடிபு செய்ததே உறுதியாக்கப்பட்டது. எனவே, கரிகாலன் காலம் கி. பி. முதல் நூற்ருண்டிற்குப் பிற்பட்டதன்று என்பது துணியப்பட்டது.

wm"=sans=

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/147&oldid=578921" இலிருந்து மீள்விக்கப்பட்டது