பக்கம்:திருமாவளவன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருமாவளவன் -

முறைமை எடுத்துக் கூறப்பட்டுள்ளம்ையானும், இருவரும் உடன் பிறந்தவரே என்பதையும், வேற்பஃறடக்கைப் பெரு விறற்கிள்ளி, குடக்கோநெடுஞ்சேரலாதைேடு போரிட்டு இருவரும் களத்தில் மடிந்தனர் எனக் கூறப் படுவதாலும்,' கிள்ளிவளவன் கருஆரை முற்றுகை செய்

தான்” என்றும், -

இமயஞ் சூட்டிய எம விற்பொறி - மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலேய வாடா வஞ்சி வாட்டும் நின்' * . . . என்றும் பாராட்டப்பெறுதலாலும், அவன் உடன்பிறந் தோளுகிய கலங்கிள்ளியும் வஞ்சிப்பகைவனே எனக் கோவூர்கிழார் கூறுவதாலும், கிள்ளிவளவனும், நலங் கிள்ளியும் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியின் மக் களே ஆவர் என்பதையும் ஒருவாறு ஒப்புக்கொண்டா லும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி, கரிகாலன் மகன் என்பதைக் காட்டுதற்குரிய சான்று ஒன்றும் கிடைத்தில. ஆகவே, மணக்கிள்ளியும், வேற்பஃறடக் கைப் பெருவிறற்கிள்ளியும், கரிகாலன் மக்கள் என்றும், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியும், கிள்ளிவளவனும், கலங்கிள்ளியும் கரிகாலன் மகார் வயிற்றுப் போர்கள் என் மம், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, நெடுங்கிள்ளி யின் மகன் என்றும் கூறுவது பொருந்துமாறு இல்லை என்க.

காவிரியாற்றில், கழார்ப் பெருந்துறையின் கண் விழாக் காலத்தில், கரிகால் சோழன் கண்டிருப்ப, ஆட்டனத்தி என்ற ஆடுதல் தொழிலில் தேர்ந்த பொருகன் ஒருவன், கர்லில் கழல் புரள, அரையில் கட்டிய கச்சையின்மேல், 2ெ, 6,368 5ெ)

2. புறம் 36. 4. புறநானூறு: 32.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/46&oldid=578820" இலிருந்து மீள்விக்கப்பட்டது