பக்கம்:திருமாவளவன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருமாவளவன்

ஆட்டனத்தி சேரவேந்தன் என்றும், இவள் அவன் மனைவி என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது."

“ஆதிமந்தி கரிகாலன் மகளாயின், தன்முன் விழவி லாடிய தன் மருகன் புனலால் இழுக்கப்பட்டுச் சென்ற தைக் கண்டும், அவன் வாளா இருப்பானே? தன் வினையா ளரைக்கொண்டு அவனை மீட்டுப் பாதுகாக்கவோ, அல் லது அவனைக் கண்டுபிடிக்கவோ முயலாதிருப்பானே? அவள் தன் கணவனுகிய சேர வேந்தனைத் தேடிப் பலநாடு களிலும், பல ஊர்களிலும் தனியளாய் அலைந்து திரிய நேருமோ? இவைபோன்ற பல ஏதுக்களால், இவள் கரிகாற் சோழன் மகள் அல்லள் என்றும், ஆட்டனத்தி சேரவேந்தன் அல்லன் என்றும் துணியலாம்” என்பர் திருவாளர் வே. வேங்கடராஜுலு ரெட்டியாரவர்கள்.

தன் கண்முன்னல் துன்பப்படுபவர் யாரேயாயி னும், அவர் துயர்போக்கித் துணைபுரிவதே மனிதப் பண் புடைமையாகும். இம்மனிதப் பண்பில் மாறுபட்டவன் கரிகாலன் என்று கொள்வது கூடாது. தன் கண்முன் தனக்கு மகிழ்ச்சியூட்டுமாறு, ஆடல்புரிந்த ஆட்டனத்திக் குத் துன்பம் நேர்ந்தது என்ருல், அவன் தன் உறவினன் அல்லன், ஆகவே, அவன் துயரைப்போக்க முயலாத வாளா இருந்தான் என்று கினைத்தலும் தவறு. ஆதிமந்தி யார் கரிகாலன் மகளே அல்லள் என்று கொண்டா

1. மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக் கோன்

தன்னைப்புனல் கொள்ளத் தான்புனலின் பின்சென்று கன்ன வில் தோளயோ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழி இக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் * : *,

-- -சிலம்பு: 21; 11.15. 2. பரணர்: பக்கம் 82-83. ... .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/48&oldid=578822" இலிருந்து மீள்விக்கப்பட்டது