பக்கம்:திருமாவளவன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ருேரும் உற்ருேரும் 37

லும், அவர் ஒரு சிறந்த புலவர்; புலவராலும் பாராட் டத்தக்க பெரும்புலமை வாய்ந்தவர். க ரி கால ன், தன்னைப் பாடியபுலவன் ஒருவனுக்குப் பதினறு நாரு யிரம் பொன் பரிசு அளிக்கும் பேர் உள்ளம் வாய்க் தவன். அவ்வியல்புடையான், தன் கண்முன்னே, நல் லிசைப் புலமை மெல்லியலார் ஒருவர், தன் கணவனை இழந்து வருந்துவதைக் கண்டும், அவர் துயர் போக்க ஒன்றும் செய்யாது இருந்தான் என்று கொள்வது நேரிது ೩ಆTಣ. ஆட்டனத்தியை மீட்பதற்குரிய முயற்சி பல செய்தே இருப்பான் என்ருலும், அவையெல்லாம் அவன் மீட்சிக்குத் துணைபுரியாமல்போயிருத்தல்வேண்டும். ஆகவே, கரிகாலன் கண்டிருந்தும் மீட்க முயலவில்லை; தன் மகள் கணவனுயின் முயன்றிருப்பன் ; ஆகவே, ஆதிமந்தி அவன் மகள் அல்லள் என்று கூறுவது சரியான வாதமாகாது.

'சிலப்பதிகார அடிகளில் ஆதிமந்தி, ஆட்டனத்தி என்னும் பெயர்கள் குறிக்கப்படவில்லை. அன்றியும் இச் சிலப்பதிகாரம் கூறும்வரலாறும், பரணர் பாட்டுக்கள் கூறும்வரலாறும் முரண்படுகின்றன’’ என்று வேறு தடை களைத் தோற்றுவிக்கின்ருர் திரு. வே. வேங்கடராஜாலு ரெட்டியாரவர்கள். சிலப்பதிகாரம் கூறும் கற்புடை மக ளிர் எழுவர் வரலாற்றில், ஆதிமந்தியார் பெயரே அன்றி, மற்றைய மகளிர் பெயரும் கூறப்படவில்லை ஆதலாலும், தான் எழுதப்புக்க நூல் இயல்பு, கால இயல்புகளுக்கு ஏற்ப, தான் கூறப்புக்க வரலாற்று நிகழ்ச்சிகளோடு சிறிது கற்பனையையும், கடவுட்டன்மையையும் ஏற்றிக் கூறுவதல் லது, நடவாத வரலாற்றையோ, கடந்த வரலாற்றினைத் திரித்தோ கூருர் இளங்கோவடிகள் ஆதலாலும், ஆதி

1.பரணர்: பக்கம் 83.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/49&oldid=578823" இலிருந்து மீள்விக்கப்பட்டது