பக்கம்:திருமாவளவன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாவளவன்

- மந்தி கரிகாலன் மகள் அல்லள் என்று கூறுவதற்கு அவை

சான்முக அமையா என்க.

பரணர் பாட்டுக்களில், ஆதிமந்தி கரிகாலன் மகள் ‘. என்ருவது, ஆட்டனத்தி வஞ்சிக்கோன் என்ருவது குறிக் கப்படவில்லை; ஆதிமந்தி கரிகால்வளவன் மகளாயின், வரலாறுகளைக் கூறும் நோக்கமிக்கவராய பரணர், இவ் வரலாற்றைக் கூறிய பாட்டுக்கள் நான்கனுள் எங்கேனும் இதனைக் கூறியிருப்பான்றே ' என்று வினவுகிறர் திருவாளர் ரெட்டியாரவர்கள். பரணர், வரலாற்று நிகழ்ச்சி களைக் கூறுவதில் காட்டும்.ஆர்வத்தைத் தம்மால் பாடப்படு வோர்தம், உறவு முறைகளைக் கூறுவதில் காட்டுவதில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள ; உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியையும், கரிகாலனையும் பாடிய இவர், இவ்விருவரும் இன்ன முறையினர் என்பதைக் கூறின ால்லர். சேரன்செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்தில் ஒரு பத்தால் பாடிய காலத்தும், அவன் தங்தைபெயரைக் குறித்தாரல்லர். எனவே, கரிகாலன் மகள் ஆதிமந்தி என்று பாணர் கூறவில்லை ; ஆகவே அம்முறையை ஏற் றுக்கொள்ளுதல் கூடாது என்று மறுப்பது சரியன்று.

கரி காலன் அம்மான் இரும்பிடர்த்தலையாராவர் என்பர்; இது குறித்து "அரச உரிமை” என்ற தலைப்பின் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண்க.

1. பரணர்: பக்கம் 83.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/50&oldid=578824" இலிருந்து மீள்விக்கப்பட்டது