பக்கம்:திருமாவளவன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

முற்காலத்து மன்னர்கள் தம் குடிகட்கு நலஞ் செய்வதுவே தம் கண்ணுங்கருத்துமாகக் கொண் டிருந்தனர். அம்மன்னர்கள் அறிவும் இாக்கமும் அன்பும் அணிசலகைக்கொண்டு வாழ்ந்துவந்தனர்.

அவர்கள் ஆட்சியின் கீழ் வாழ்ந்துவந்த காட்டு மக்களின் நிலையை வான வில்லையன்றிக் கொலை வில்லைக் கண்டறியார்; கலப்பை யென்னும் உழு கருவியை அல்லாமல் கொலைக்கருவிகளைக் கண்டறி யார் உன் குடிகள், என்று ஒரு புலவர் ஒர் மன்னனே வாழ்த்துங்கால் குறிப்பிடுகின் ருர்,

ஒர் அரசனும் தன்னைக்குறித்த வஞ்சினங் கூறுங் கால் எம் அரசன் கொடியவன் என்று குடிகள் என்னைப் பழிதாற்றுகின்ற கொடுங்கோலனுகுக; கல்வி கேள்விகளையுடைய மாங்குடிமருதனர் போன்ற புலவர்கள், என் காட்டையும் என்னையும்பற்றிப் புகழ்ந்து பாடாமல் இருக்கக்கடவாராக, என்று கூறுகின்ருன்.

ஆகவே, அக்கால வேந்தர்கள் தம் கலங்கருதாது குடிகள் நலனென்றே கருதி வாழ்ந்தனரென்று பழங் கால உண்மை வரலாறுகளால் காணக்கிடக்கின்றது. இம்மன்னர்போன்ற செங்கோல்வேந்தர் தம் உண்மை வர் லாறுகளே ஆராய்ந்து கண்டறிவது நாட்டுக்கும் மக்கட்கும் நலம்பல பயப்பதாகும். ஆதலால் மேற் கூறிய செங்கோல் வேந்தர்கள் போன்ற சிரிய கொள்கையுடையவனே திருமாவளவன்' என்னும்

தி.-"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/6&oldid=578781" இலிருந்து மீள்விக்கப்பட்டது