பக்கம்:திருமாவளவன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திருமாவளவன்.

பதைக் காஞ்சிப் பல்லவ அரசர்கள்.” என்று திரு. P. T. சீனிவாச அய்யங்கார் அவர்களும், "வேங்கட்த்தில் வாழும் வடுகர்’ என்று திருவாளர் உலகநாதம் பிள்ளை - அவர்களும் கூறுவர். இத்தொடரால் குறிப்பிடப்படு 'வோர் வேங்கடத்திற்கு அப்பால் உள்ள வடநாட்டாசரே

என்பது என் கருத்து.

தமிழ்நாடு முழுதும் தன் ஆணைக்கீழ் அடங்கியது. கண்ட கரிகாலன், பெற்றது மகிழ்ாணுய் மேலும் போரே விரும்பினைக, தன்னை எதிர்ப்போர் தமிழகத்தில் யாரும் இன்மை அறிந்து, நல்ல காளில் வாள், குடை, முரசு முத லாயவற்றை முன்னே பேர்கவிட்டு என் வலிகெழு தோளின் பெருமையை, இம்மண்ணகமருங்கில் என் கண்ணுர்பெறுக’ என வஞ்சினம் கூறி, வ்டத்ாடு நோக்கிச் சென்ருனே, இம யம் இடையே கின் தடுத்தது. ஆகவே, அதன் உச்சி யில் புலி, பொறித்து மீளும்பொழுது, வச்சிாாட்டாசன் தனக்கு இறைக்கடகைக் கொடுத்த முத்துப் பக்கல், மகத நாட்டாசன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபம், அவத்தி வேந்தன் உவந்தகொடுத்த தோரண வாயில் முத் லாயவற்றைப் பெற்றுத் தமிழ்நாடு மீண்டான். கரிகாலன் வடநாட்டுச் செலவு பற்றிக் கருத்து வேறுபடுவார் கூற்று, காஞ்சிநாம்ே கரிகாலனும்’ என்ற தலைப்பின் கீழ் ஆராயப்படும். - - -

History of the Tamils 345–346.

கரிகாற் பெருவளத்தான்: பக்கம் 35.

சிலப்பதிகாரம். :5; 90-104,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/76&oldid=578850" இலிருந்து மீள்விக்கப்பட்டது