பக்கம்:திருமாவளவன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் பெற்ற வெற்றிகள் 63

இரு கூறுடையதாய், மாஇலங்கை என மறுபெயர் பூண்டதாய் கச்சியைத் தனக்கு இராஜதானியாகக் கொண்டதாய், புனல்நாடாகிய சோழநாட்டிற்கு வடக் கிருப்பது. இங்காட்டில் ஒரிடத்தும் கிலேயின்றி, அலைந்து திரியும் குறும்பர் என்னும் ஒர்கொடிய சாதியார் வாழ்ந்து வந்தனர். அவர்களை அடக்கி ஒரிடத்து கிலேபெறச் செய்த தன்றி அன்னவர் நாட்டினேயும் இருபத்து நான்கு கோட் டங்களாகப் பகுத்து அவற்றை வேளாளர்க்குக் கொடுத்து அங்குக் குடியேற்றின்ை. செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள சேயூர், குணும்பேட்டை முதலிய. இடங்களில் இக்காலத்து வாழும் முதலிமார்கள், தம்மைக் கரிகால் வளவளுல் குடி யேற்றம்பெற்ற வேளாளர மரபைச் சார்ந்தவரெனக் சொல்லிக்கொள்ளுகின்றனர் ” என்று கூறுவர் திருவாளர் உலகநாதம் பிள்ளையவர்கள்." - . பொதுவர் :-பொதுவர் என்பார், பல்லவ காட்டிற்கு வடக்கே கடப்பா, கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த இடை யர் எனவும், கரிகாலன் அவர்களே அடக்கி ஒருவழிப்படுத் தினுன் எனவும், இவ்வாறு கரிகாலன் ஆணைக்கீழ்க் கொண்டுவரப்பட்டோர், இன்றும் மயிர்க் கம்பளங்களை நெய்யும் தொழிலை மேற்கொண்டிருக்கும் குறும்பர்களே என்றும் கூறுவர். திருவாளர் P. T. சீனிவாச அய்யங்கா ாவர்கள். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயர்குலக தலைவர்” என்பர் திருவாளர் நீலகண்ட சாஸ் திரியார் அவர்கள்."

- இருங்கோவேள் என்பான் வேளிர்குலத்தான் என்ப தல்லது பிற ஒன்றும் தெரிந்திலது. இனி வடவர்' என் 1. கரிகாற் பெருவளத்தான். பக்கம் 33-34, - 2. History of the Tamils. - . . . . 3. Studies in Chola History and Administration : P. 53.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/75&oldid=578849" இலிருந்து மீள்விக்கப்பட்டது