பக்கம்:திருமாவளவன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திருமாவளவன்

பொருத்தமாகக் காணப்படவில்லை. ஆனல், நாகர் மரபில் எயினர், ஒவியர், ஒளியர், அருவாளர் எனப் பல பகுப்பி னர் காணப்படுகின்றனர். இவர்களில் ஒளிநாகர் கி. பி. 11 ஆம் நூற்ருண்டளவும் மிக்க பராக்கிரமசாலிகளாக இருந்தனர் என்பது அவர்கள், இராஜராஜேந்திர சோழ தேவ்ர் (கி. பி. 1040-1069) செங்கோல் கைக்கொண்ட ஒன்பதாம் ஆண்டில் மாமல்லபுரத்து வாகசுவாமிக்கு கில தானம் கொடுத்திருக்கின்றதைப் பொறித்துவைத்துள்ள கல்வெட்டுச் சாதனத்தால் அறியக்கிடக்கிறது. (Indian Artiguary Vol. xxii. P. 57) -gãowra of Laos Galarrorf எனக் கொள்வதினும் ஒளிநாகர் எனக் கோடலே பொருத்தமுடைத்தால் காண்க ”” என்றுங் கூறுவர் திரு வாளர் L. உலகநாதம் பிள்ளையவர்கள்.

அருவாளர் :- காவிரி யாற்றுக்குச் சற்று வடக்கே பெண்ணையாறு பாயும் அருவா நாட்டில் வாழ்வோர் அருவாளராவர்” என்று திருவாளர் நீலகண்ட சாஸ்திரி ཏི་རཱ་ யார் அவர்களும்,' ' கி. பி. இரண்டு அல்லது மூன்ரும் நூற்ருண்டில் தமிழ் அரசுகள் கிலேகுலைந்து அழிதற்குக் காரணமாய் இருந்தவர் இவ்வருவாளரே என்று இலக்கியங் கள் சான்று அளிக்கின்றன ; அவ்வருவாளர் தமிழரின் முற்றும் வேறுபட்டவர்” என்று வரலாற்றுப் பேராசிரி யர் A. W. சிமித்து அவர்களும் 'தொண்டையர் வடவர் என்பாரைப் போல அருவாளரும் ஒரு கூட்டத்தார் ’ என்று திருவாளர் R. கோபாலன் அவர்களும்' கூறுவர். * அருவா நாடென்பது, அருவாவடதலை, அருவா என

1. கரிகாற் பெருவளத்தான் : பக்கம் 37. 2. The Cholas P, 42. 3. Early History of India. P. 416. „4.: Pallavas of Kanchi P. 9. . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/74&oldid=578848" இலிருந்து மீள்விக்கப்பட்டது