பக்கம்:திருமாவளவன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருமாவளவன்

கொண்டு ஆண்ட திரையனையும் பாடியுள்ளமையானும் (பெரும்பானுற்றுப்படை), அதுவும், “முரசு முழங்குதானே மூவரினும் சிறப்புடையோன்' எனப் பாராட்டியுள்ளமை யானும், காஞ்சியைக் கரிகாலன் கைப்பற்றினன் அல்லன் என்பது தெளிவாகவும், விஜயாலயன் வழிவந்த முதலாம் இராஜேந்திரன் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும், தெலுங்குச் சோழர் கல்வெட்டுக்கள் சிலவும், பெரிய புராணமும் கரிகாலன் காஞ்சியைக் கைப்பற்றிப் புதுக்கி ஞன் எனவும், அதில் இருந்து ஆண்டான் எனவும் கூறுகின்றன. - - - ..'. .

கரிகாலனைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ண னரே திரையனையும் பாடியிருப்பதால், இருவரையும் ஒரே காலத்தில் வாழ்ந்த இருபேர் அரசர்களாய்க் கொள்ளுதல் வேண்டும்; கரிகாலன் வடவரையும் வெற்றிகொண்டான் எனப் பட்டினப்பாலையும், சிலப்பதிகாரமும், பிறவும் கூறும்போது அவன் ஆட்சிக்கு அண்மையில் திரையன்

1. முரசு முழங்கு தானை மூவருள்ளும்

இலங்கு நீர்ப் பாப்பின் வளைமீக் கூறும் 'வலம்புரியன்ன வசைநீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேற் றிாையன்." -பெரும்பாண்: 32-37. 2. ' என்றும் உள்ள இந் நகர்கலி யுகத்தில்

இலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன் வன்தி மற்புலி இமயமால் வரைமேல்

வைக்க எகுவோன் தனக்கிதன் வளமை சென்று வேடன் முன் கண்டுரை செய்யத் திருந்து காதாான் குட்பட வகுத்துச் குன்று போலுமா மதில்புடை போக்கிக்

குடியிருத்தின கொள்கையின் விளங்கும்."

-திருக்குறிப்புத்தொண்டர்: 85.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/78&oldid=578852" இலிருந்து மீள்விக்கப்பட்டது