பக்கம்:திருமாவளவன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சிநாடும் கரிகர்லனும் 67.

ஒரு பேர் அரசனுக வாழ்ந்தான் என்று பெரும்பானுற்றுப் படை கூறுவது பொருந்தாது என்று உட்கொண்டு, 'கரிகாலன் இளமைக் காலத்தே திரையன் காஞ்சியைக் கைப்பற்றி ஆண்டான்' என்று திரு. கனகசபை அவர் களும்', 'கரிகாலன் காஞ்சியை வென்ற பிறகு அதன் ஆட்சிப் பொறுப்பைத் திரையன்பால் ஒப்புவித்தான்” என்று திருவாளர். P. T. சீனிவாச அய்யங்கார் அவர் களும் அமைதி கூறுவர். x

கரிகாலன் வரலாற்றை, இலக்கியம், கல்வெட்டு முதலாயின கொண்டு ஆராய்ந்து முடிவு செய்த பேரா சிரியர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள்:- -

1. கரிகாலன் வரலாற்றை உரைக்கும் எட்டுத் தொகை போன்ற பழந்தமிழ் நூல்கள் அவன் வடநாட்டு வெற்றியைப் பற்றி விளக்கம் தாராது இருக்கும்போது பட்டினப் பாலையில் கண்ட “வடவர் வாட” என்ற தொடர் ஒன்றே அவன் வடநாட்டு வெற்றியை உறுதி செய்வ தாகாது, பழஞ்சான்றுகள் பல மேலும் ബേ;8 - 2. கரிகாலன் வடநாட்டுச் செலவை முதன் முதலாக விளக்கும் சிலப்பதிகாரம், கரிகாலன் காலத்திற்குக் குறைந்தது அரை நூற்ருண்டு பிற்பட்டதாகலாலும்,' அக்கால எல்லைக்குள் உண்மைக்குப் புறம்பான புனைந் துரைகள் பல அவன் வரலாற்றில் கலந்திருத்தல் கூடுமாத லாலும்; அக்ால், வரலாற்றிற்குப் புறம்பான புனைந்துரை. 1. The Tamils 1800 Years ago. - 2. History of the Tamils: P. 397. - 3. Studies sn Chola History and Administration P. 51. 4. . . . . . . . . . . . . P. 49. 5. , * , P. 50.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/79&oldid=578853" இலிருந்து மீள்விக்கப்பட்டது