பக்கம்:திருமாவளவன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii. திருமாவளவன்

என்று எண்ணி, கரிகாலன் வரலாறு குறித்து, அறிஞர் பெருமக்கள் இதுவரை எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் எல்லாவற்றையும் ஒருங்கு கொணர்ந்து ஒப்புநோக்கிப் படித்ததில், அவர்கள் அனைவரும், கரிகாலன் வரலாற்றில் ஒரு பகுதியை உண்மை என ஒருவர் ஒப்புக்கொ ண்டுள்ள னர் எனில், மற்றையோர் ஒப்புக்கொள்ளாது மாறுபட் டுள்ளனர் என்ற நிலைமையையே மேற்கொண்டுள்ளனர் என்பது புலனுயிற் று. ஆகவே, அவர்கள் ஒவ்வொரு வரும்கூறும் கருத்துக்கள் அனைத்தையும் நடுநிலைமைக்கண் கின்று ஆராய்ந்து, கரிகாலன் வரலாற்றை முடிவுசெய்தல் நலம் என்றே இப்பணியை மேற்கொண்டேன்; எனினும், அப்பணியை மேற்கொண்ட யானும் அவன் வரலாற்றை அறுதியிட்டு முடிவு செய்யாமலே விட்டுச் செல்ல வேண்டியவனுயினேன் ; இந்நூலுள், யான் செய்துள்ள தெல்லாம் அவன் வரலாற்ருேடு இயைபுடையதாக ஏற்றுக் கொண்டு சிலர் வெளியிடும் கருத்துக்களே, ஒப்புக் கொள்ளாதார், ஒப்புக் கொள்ளாமைக்குத் தாம் காட்டும் காரணங்கள் எத்துனே வலியுடையன என்பதையும், அவ் விருவர் கருத்துக்களுள் ஏற்பன எவை, ஏலாதன எவை என்பதையும், கிடைத்த சில்பல சான்றுகளைக் கொண்டு ஆராய்ந்து முடிவு கூறியதேயாம். இதுபோன்ற முயற்சி யில் தொடர்ந்து பணியாற்ற, தமிழ்ப் பெருமக்களின் அன்பும், ஆதரவும் தேவை என்று பணிவன்புடன் தெரி வித்துக் கொள்கின்றேன். இச் சிறு நூலை எற்று வெளி யிட்ட தென் இந்திய சைவ சித்தாந்த நாற்பதிப்புக் கழகத்

தார்க்கு என் நன்றி ; எல்லோர்க்கும் என் வணக்கம்.

திருவத்திபுரம். - - ,

లైు - - கோவிந்தன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/9&oldid=578783" இலிருந்து மீள்விக்கப்பட்டது