பக்கம்:திருமாவளவன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை - திருவாளர். மு. இராகவையங்காரவர்கள் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்ற நூலைப் படிக்க சேர்ந்தகாலை, அதில், செங்குட்டுவன் தாய் கற்சோணை என்பதைக் கொண்டு, அவனுக்கும் சோழர்குடிக்கும் உள்ள தொடர்பு குறித்து, அவர்கூறிய கருத்துக்கள் முரண்படுகின்றன என்ற எண்ணம் எழுந்தது ; அவ்வெண்ணம் எழுந்த அன்றே, சங்கநூல்களில் புலவர் பலராலும் பாராட்டப் பெறும் சேர, சோழ, பாண்டிய அரசர்களேக் காலமுறைப் ப்டி வரிசைப்படுத்தி, அவ்வரசர்களிடையே நிலவிய உறவு முறையை விளக்கி எழுதுதல்வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. இவ்வெண்ணமே நோக்கமாக, சங்க நூல் க்ளை ஊன்றிப் பயின்றுவருங்கால், கரிகாலன் வரலாறு பற்றிய சில உண்மைகள் வெளியாயின. பின்னர், வரலாற்றுப் போசிரியர், நீலகண்ட சாஸ்திரியார் அவர் கள் எழுதிய நூல்களைப் படிக்கவேண்டிய ஒருகிலே உண்டா & jay Studies in Chola History and Administration என்ற அவருடைய நூலில் அவர் கரிகாலனே ப்பற்றி எழுதி யுள்ள கட்டுரையைப் படித்தபொழுது பழைய எண்ணம் மீண்டும் தல்ைதுக்கலாயிற்று. அதில், திருவாளர் சாஸ்திரி யார் அவர்கள், கரிகாலன் வடகாட்டுச் செலவுபற்றியும், அவன் காவிரிக்கரை அமைப்புப்பற்றியும் கொண்டுள்ள முடிவுகள் நன்கு ஆராய்ந்த முடிவு செய்யப்பட்டன அல்ல என்பதும் புலனுயிற்று : ஆகவே, கமிழ் அரசர்கள் அனைவர் வரலாற்றையும் ஆராய்ந்து வெளியிடுவதற்குமுன் கரிகாலன் வரலாற்றை மட்டும் ஆராய்ந்து முதற்கண் வெளி விடுதல், பின்னூல்களுக்கும் வழிகாட்டியாக் அமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/8&oldid=910824" இலிருந்து மீள்விக்கப்பட்டது