பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ சிவமயம்

ப தி ப் பு ைர

அமிழ்தினும் இனிய செந்தமிழ் இலக்கியமாகிய திருமுருகாற்றுப்படை என்னும் தெய்விகநூல் தமிழ் வேகமாகிய பன்னிரு திருமுறைகளுள் ஒன்ருகிய பதி னேராம் திருமுறையுள் மிளிரும் ஒரு பிரபந்தமாகும். இதனே அன்பர்கள் நியமத்துடன் பொருளுணர்ந்து ஒதி உய்யவேண்டும் என்று எண்ணி இச் சபையினர் 16.8-49 தொடங்கிப் பிரதி புதன் கிழமையிலும் மாலே 6 மணிக்கு உயர்திரு கி.வா. ஜகந்நாத ஐயர் அவர்களே க் கொண்டு இச் சபையின் ஆதவிரல் திருமுருகாற்றுப்படை வகுப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இவ் வகுப்பில் கலந்துகொள்ளும் அன்பர்களுக்கும் ஏனேயோர்க்கும் பயன்படும்படி இவ்வரிய நூலுக்கு ஒர் உயரிய பொழிப்புரையை எழுதுவித்துக் குறைந்த விலையில் இச் சபையின் இரண்டாம் வெளியீடாக இதனே நம் தமிழ்ப் புதிய ஆண்டு சித்திரைமீ வே. கன்னளில் வெளியிடுகின்ருேம்.

இப் பொழிப்புரையை எங்கள் வேண்டுகோளுக் கிணங்கி எழுதி உதவிய திரு. கி. வா. ஜகங்காத ஐயர் அவர்களுக்கும், இவ்வுரையைப் பதிப்பிக்குமாறு அநுமதி தந்து வெகு விரைவில் அழகுற அச்சிட்டு உதவிய மயிலாப்பூர் அல்லயன்ஸ் கம்பெனியாருக்கும் எங்கள் நன்றி உரியதாகுக.

சைவம் வாழ்க! தமிழ் வாழ்க!

இப்படிக்கு,

1/488, தங்கசாலே வீதி - * சைவசமய பகதஜன சபையா

p. T. சென்னே, 6.4.49

சை. சி. ப. ஐ. 荔征