பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வேற் சேய் 87. என்ற கருத்தை இது காட்டுகிறது. அத்தகைய மாமரத் தைத் தடித்து, அவுணருடைய வெற்றி எல்லாம் அடங்கும் படியாகச் செய்தவன் முருகப்பெருமான். சேய் என்னும் பெயரை உடையவன் அவன்; சிவந்த நிறமுடையவன். அவன் புகழ் இன்னதென்று வரையறுத்துச் சொல்ல ஒண்ணுதது; அவன் கையில் ஏந்திக் கொண்டிருக்கும் வேலின் புகழும் அத்தகையது. இவ்வாறு சூாபன்மாவை அழித்த சிவந்த வேல் இறைவன் கையில் உள்ளது. இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் கல்வலம் அடங்கக் கவிழ்இணர் மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து எய்யா கல்இசைச் செவ்வேல் சேஎய். (குதிரையும் மனிதனும் ஆகிய இரண்டு பெரிய உருவம் இணைந்த ஒரு பெரிய குரனுடைய உடம்பை, ஆறு வேறு திருவுருவங்களுடன் அவன் அஞ்சும்படி மேற் சென்று, அசுரர்களுடைய மிக்க வலிமையெல்லாம் அடங்கும்படி, கவிழ்ந்திருக்கும் கொத்துக்களையுடைய மாமரத்தின் அடி மரத்தைப் பிளந்த, குற்றமில்லாத வெற்றியையுடைய, அறிய முடியாத நல்ல புகழையுடைய செவ்வேலேயுடைய முருகனுடைய-திருவடி என்று பின்னலே இணக்கிருர்) பழைய வரலாறு முருகப்பெருமானப் பற்றிய கதைகள் பல பழங்காலம் முதற்கொண்டே வழங்கி வருகின்றன. காலம் மாற மாற வெவ்வேறு கதைகள் பக்தர்களிடத்தில் உலவுகின்றன.